கம்பராமாயணம் 327 · பால 6.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தவம் செய்தோர்கள் - தவத்தைச் செய்தவர்கள்; வரங்கள் மாசு அறவாழ் - அத்தவத்தால் பெற்ற வரங்களுக்குக் குறைவில்லாதபடி இருந்து வாழ்கின்ற; புரங்கள் நேர் இலா நகரம் - பதவிப்புரங்களான அமராவதி, அளகை ஆகியவையும் நிகரில்லாத அயோத்தி மாநகரத்தை; நீங்கிப் போய் - அம்மூவரும் நீங்கிச் சென்று; அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்ன - நடன அரங்கிலே ஆடுகின்ற நாட்டிய மகளிரின் சிலம்பொலி போல; நின்று இரங்கு வார்புனல் - என்றும் நிலைத்து ஒலித்துக் கொண்டிருக்கும், பெருகிவரும் நீரை உடைய; சரயு எய்தினார் - சரயு நதியை அடைந்தார்கள்.
வரங்கள்: வேண்டிக்கொண்ட தவபலம். தவம்: புண்ணியமுமாம். தவம் புரிந்தோர் புகுவது துறக்கமாதலின், இங்குப் புரங்கள் அமராவதியும், அளகாபுரியும் எனக்குறிப்பிடப்பட்டன. இவையும் அயோத்திக்கு நிகராக மாட்டா என்பதால் “புரங்கள் நேரிலா நகரம்” என்றார். கோவை இந்நகரொடு என்று குறிக்கலாவது. 'அத்தேவர் தம் நகரியைச் செப்புகின்றதென்' என நகரப் படலத்துள் கூறுவது நினைவுகூரத்தக்கது. அரங்கு: நடனமண்டபம். 'அன்ன' உவமவுருபு. இரங்குதல்: ஒலித்தல். நின்று இரங்கு வார்புனல் சரயு என்றதால் சரயு எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நீர்ப் பெருக்காறு என்பது புலனாகும். “அமரர் போற்றும் விழுநதி” என்பார் பின்னும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaving the city with which no other city could compare, not even the cities where those
- who did penance dwell, their boons without blemish,
- they reached the Carayu, whose long waters sound unceasing
- like the anklets of dancers on the stage.
What the poem says
The sage and the two princes leave Ayōtti, which even the heavenly cities, Amarāvatī and Aḷakāpuri, where those who earned merit by penance go to live, cannot match. They come to the river Carayu.
The river's steady murmur is like the anklets of dancers on a stage.