கம்பராமாயணம் 328 · பால 6.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரும்பு கால்பொர - கரும்புச் சோலையிலே காற்று வீசுவதால்; கமுகு வார்ந்த தேன் - கமுகு மரங்களிலே பெருகிவரும் தேன்; வரம்புமீறிடும் - வரப்பை மீறிச் செல்லும்படியான; மருதவேலிவாய் - மருத நிலங்களிலே; அரும்பு கொங்கையார் - தோன்றிவரும் தனங்களையுடைய இளமாதரது; அம்மென் ஓதிபோல் - அழகிய, மென்மையான கூந்தலைப் போலக் கறுத்த; சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் - வண்டுகள் வாழ்கின்ற ஒரு சோலையை அம்மூவரும் அடைந்தனர்.
கால்: காற்று. பொருதல்: வீசுதல். வார்ந்த: பெருகிய. வரம்பு: வரப்பு. மருதவேலி: மருதநிலம். அரும்புதல்: தோன்றுதல். “அரும்பு கொங்கை” வினைத்தொகையாம். ஓதி: கூந்தல். வண்டின் கரு நிறத்துக்கு உவமையாகக் கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the farmland of the marutam country, where honey dripping from areca palms,
- as the wind beats against the sugarcane, overflows the field ridges,
- they reached a grove where bees live, dark
- like the lovely soft hair of young women with budding breasts.
What the poem says
Beyond the river they walk through rich farmland, the marutam landscape of Tamil poetry, so fertile that honey from the areca palms overflows the ridges of the fields.
They come to a grove full of bees, as black as the soft hair of young girls.