கம்பராமாயணம் 3353 · ஆரணிய 7.204
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்றலும் - இவ்வாறு மாரீசன் கூறியதும்; எழுந்து புல்லி - இராவணன் எழுந்து அவனைத் தழுவி; ஏறிய வெகுளி நீங்கி - மேற் பொங்கிய சினம் மாறி; 'குன்று எனக் குவிந்த தோளாய் - மலையெனத் திரண்ட தோள்களை உடையவனே; மாரவேள் கொதிக்கும் அம்பால் - மன்மதன் எய்த வேதனைக் கணையால்; பொன்றலில் - இறப்பதை விட, இராமன் அம்பால் - இராமனுடைய அம்பினால், பொன்றலே புகழ் உண்டு அன்றோ - இறத்தலால் புகழ் ஏற்படும் அல்லவா?; தென்றலைப் பகையைச் செய்த - இனிய தென்றலையும் கொடிய பகையாக மாற்றிவிட்ட; சீதையைத் தருதி - சீதையை எனக்காகக் கொண்டு தருவாய், என்றான் - என்று இராவணன் வேண்டினான். காமன் அம்பால் சாவதை விட இராமன் அம்பால் சாவது மேல் என்றான் இராவணன் : எவ்வாறாயினும் பின்னர் நிகழவிருப்பதை முன்னரே குறிப்பால் கூறுதல் கருதத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At this Irāvaṇaṉ rose and embraced him, his swelling anger gone:
- 'You whose shoulders are massed like hills! Rather than perish by the burning arrows of Māraṉ,
- to perish by Irāmaṉ's arrow at least brings glory, does it not?
- Bring me Cītai, who has made even the south wind my enemy,' he said.
What the poem says
Pleased that Mārīcaṉ has given in, Irāvaṇaṉ embraces him. He is tormented by love: Māraṉ, the god of desire, wounds him, and the gentle south breeze, which should soothe, only burns him.
He says that dying by Irāmaṉ's arrow would be more glorious than dying of love. Without meaning to, he foretells his own end.