கம்பராமாயணம் 3352 · ஆரணிய 7.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன்வயின் உறுதி நோக்கி - (இராவணனாகிய) உன் நலத்தினை நாடி; உண்மையின் உணர்த்தினேன் - உண்மையாகவே எடுத்துக் கூறினேன்; மற்று - அவ்வாறன்றி; என்வயின் இறுதி நோக்கி - எனக்கு அழிவு நேரும் என்று கருதி, அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் - பயம் காரணமாக நான் அறிவுரை கூறினேன் இல்லை; நாசம் வந்துஉற்றபோது - அழிவு நெருங்கி வரும் நேரத்தில்; நன்மையும் தீமை அன்றே - நல்லது சொன்னாலும் அது தீமையாகவே கருதப்படும் அல்லவா? புன்மையின் நின்ற நீராய் - தீய நெறியில் செல்லும் தன்மை உடையவனே; செய்வது புகல்தி - நான் செய்ய வேண்டியதைச் செப்புக; என்றான் - என மாரீசன் (உடன்பட்டுப்) பேசினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I spoke the truth to you, looking to your own good;
- I did not speak out of fear, looking to my own end.
- When ruin has come close, even good counsel becomes evil, does it not?
- You who stand fixed in baseness, tell me what I must do,' he said.
What the poem says
Mārīcaṉ yields. He insists his warning came from concern for Irāvaṇaṉ, not from fear for himself.
But when destruction is near, he says, even good advice is taken as harm. Calling the king a man set in wickedness, he asks what task he is to perform.