கம்பராமாயணம் 3351 · ஆரணிய 7.202
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கன் அஃது உரைத்தலோடும் - இராவணன் அவ்வாறு கூறியதும்; அறிந்தனன் அடங்கி - இராவணன் மனப்போக்கை அறிந்தவனாய் அடக்கம் மேற்கொண்டு; 'நெஞ்சம் தருக்கினர் கெடுவர்' என்றல் - மனச் செருக்குக் கொண்டவர்கள் அழிவார்கள் என்பது; தத்துவ நிலையிற்று அன்றோ - ஆழ்ந்த தத்துவ நிலையுடையது அல்லவா? (மேலும்); "செருக்குநர்த் தீர்த்தும்" என்பார் தம்மின் - செருக்கு உற்றவர்களை அழித்துவிடுவோம் என்று கருதுவோரைவிட; ஆர் செருக்கர் - மிகுந்த செருக்கு உடையவர்கள் யார்?; என்னா - என்று மனத்துள் நினைத்து; உருக்கிய செம்பின் உற்ற நீர் என - உருக்கப்பட்ட செம்பின் மீது பட்ட தண்ணீர்த்துளி வற்றுதல் போல; (வேகம் குன்றி); உரைக்கலுற்றான் - மாரீசன் பேசலுற்றான்.
தருக்குற்றார் அழிவர். தருக்குற்றவனைத் திருத்துதலும் பேதைமை என உணர்ந்து மாரீசன் அடங்கினான். மாரீசனின் உணர்வு முற்றும் அடங்கினமைக்கு உருக்கிய செம்பின் உற்ற நீர் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the demon said this, Mārīcaṉ understood and grew subdued: 'That the proud of heart
- come to ruin is a truth of deep wisdom, is it not?
- And who are prouder than those who say, We will cut down the proud?' Thinking so,
- like water fallen on molten copper, he began to speak.
What the poem says
Mārīcaṉ sees Irāvaṇaṉ's mind and gives up resisting. He reflects that arrogance destroys a person, and that none is more arrogant than one who boasts of destroying the arrogant.
The simile of water on molten copper shows how his spirit shrinks and dries away as he begins to answer: trying to correct a proud man is folly.