கம்பராமாயணம் 3355 · ஆரணிய 7.206
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயவன் அனைய கூற - மாரீசன் அவ்வாறு மொழியவும்; அரக்கர் கோன் - அரக்கர் தலைவனான இராவணன்; 'ஐய - ஐயனே; உன் தாயை நொய்து ஆருயிர் உண்டானை - உனது தாயான தாடகையை இழிவான முறையில் மிக எளிதில் அழித்தவனை; கொல - கொல்லுதற்கு; யான் சமைந்து நின்றேன் - நான் ஒருப்பட்டு நிற்கின்றேன்; ஐயா போய்ப் புணர்ப்பது என்னே - ஐயனே, போய்ச் செயத் தக்கது என்ன; என்பது - என நீ கேட்பது; பொருந்திற்று ஒன்றோ - பொருத்தமான கேள்விதானா?; அவளை - அச்சீதையை; மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் - மாயம் செய்து வஞ்சனையால் அன்றோ பற்றுதல் வேண்டும்; என்றான் - என்று (இராவணன் கூறினான்.
'என்ன செய்வது என்பதும் ஒரு கேள்வியா? போரிடுவதில்லை என முன்னமே சொல்லியிருப்பதால் மாய வஞ்சமே வழி' என இராவணன் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he spoke so, the king of demons said: 'Sir, the man who easily
- took the dear life of your mother, I stand ready to kill;
- Go, sir, what is to be done? Is that a fitting question at all?
- Is it not by illusion and deceit that she is to be seized?' he said.
What the poem says
Irāvaṇaṉ brushes aside Mārīcaṉ's question. He himself is ready to kill Irāmaṉ, who slew Mārīcaṉ's mother Tāṭakai so easily.
Since Mārīcaṉ has already refused to fight, the only task left for him is to help carry Cītai off by magic and trickery.