கம்பராமாயணம் 337 · பால 7.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விஞ்சுவான் மழையின்மேல் - வானிலிருந்து பெய்யும்மழை நீரைவிட மேலாக; அம்பும் வேலும்பட - அம்புகளும், வேல்களும், மார்பில் படும்படி; செஞ்சவே செரு முகத்தன்றியே - செம்மையான போர் முகத்தல்லாது; திறனிலா வஞ்சகர் தீவினைகளால் - (அறப்போர் செய்யும்) திறமையில்லாத வஞ்சகர்களின் சூழ்ச்சிச் செயல்களால்; மான மா மணிஇழந்து - (சிறைப்பிடிக்கப்பட்டு) தமது மானம் என்ற மணியை இழந்து; அஞ்சினார் நெஞ்சுபோல் - தோல்வியடைந்த மெய்வீரர்களின் மனம் எப்படிக் கொதிக்குமோ அது போல; என்றும் ஆறாது - பாலை நிலத்தின் வெப்பம் எப்போதும் ஆறாதிருக்கும்.
அரோ: அசை. விஞ்சுவான்: பூதங்களில் விஞ்சிய வான். வேலை: முதனிலைதிரிந்த தொழிற் பெயர் இலா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அஞ்சினார்: வினையாலணையும் பெயர் போர்வீரர்க்கு அஞ்சுதலாவது வீரம் இருந்தும் அதனைக் காட்ட வழியின்றி அஞ்சியிருத்தலாம்.
சூழ்ச்சியால் வென்று சிறை வைக்கப்பட்ட உண்மை வீரர்களின் உள்ளக் கொதிப்பு ஆறாதது போல, பாலையின் வெப்பம் என்றும் ஆறாது என்றார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- More than rain from the lofty sky, arrows and spears should strike them
- squarely, on the battlefield; but instead, through the evil deeds of deceivers
- who lack the skill for fair war, they lose the great jewel of their honour,
- and like the hearts of such dismayed warriors, the land never cools.
What the poem says
A simile for the desert's unending heat. Picture true warriors who would gladly take arrows and spears on the chest, thicker than rain, in open battle, but who are instead captured by trickery and lose their honour without a fight.
Their hearts seethe and never cool, because they had courage and no chance to show it. The desert's heat is like that burning resentment: it never subsides.