கம்பராமாயணம் 336 · பால 7.6

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படியின்மேல் வெம்மையைப் பகரின் - இப்பாலை நிலத்தின் வெப்பத்தைச் சொன்னாலும்; பகரும்நா முடியவேம் - சொல்லும் நாவும் முழுதும் வெந்து போகும்; முடிய மூடு இருளும் வான்முகடும் வேம் - முற்றும் மூடியுள்ள இருட்டும் வானத்து உச்சியும் வெந்து போகும்; விடியுமேல் வெயிலும் வேம் - விடிந்த பின்னாயின் சூரியகிரணமுமே வெந்து போகும்; மழையும்வேம் மின்னினோடு இடியும் வேம் - மேகமும் மழையும் வேகும் மின்னலுடன் இடியும் வெந்து போகும்; என்னில் வேவாதவை யாவை - என்று சொல்லக் கூடுமானால் அப்பாலையின் வெப்பத்தால் வேகாதவை எவை? (ஒன்றுமில்லை என்பதாம்).

படி: நிலம். இங்குப் பாலை நிலத்தை உணர்த்திற்று. வெம்மை: வெப்பம். பண்புப்பெயர். பகரு நா: வினைத்தொகை. நாக்கு. சூரிய வெப்பம் அப்பாலை நிலத்தின் மணல்முழுதும் படிந்து நீங்காத வெப்பமடைந்து இரவிலும் கொதித்திருக்கும். விடிந்த பின் தோன்றும் இளவெயிலையும் வேகச் செய்யும் என்பார் “விடியுமேல் வெயிலும்வேம்” என்றார் வேறுயாவை: வேறியாவை (குற்றியலிகரம்) ஏ: வினா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even to speak of the heat upon that land, the tongue that speaks
  2. would burn through; the darkness that covers all, and the vault of the sky, would burn;
  3. when day breaks, the sunlight itself would burn; the rain would burn; and with the lightning
  4. the thunder would burn: if so, what is there that would not burn?

What the poem says

The description of the desert continues with a string of impossibilities. The sand holds the sun's heat so thoroughly that it seethes even at night, so the darkness and the sky above are scorched, and the fresh light of dawn is itself burned by the ground it falls on.

Rain, lightning and thunder, things that belong to cooling storms, are burned too. The closing question expects the answer: nothing escapes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭiyiṉmēl vemmaiyaip pakariṉum pakarum nā
muṭiya vēm; muṭiya mūṭu iruḷum vāṉ mukaṭum vēm
viṭiyumēl veyilum vēm; maḻaiyum vēm; miṉṉiṉōṭu
iṭiyum vēm eṉṉil, vēṟu yāvai vēvātavē.