கம்பராமாயணம் 335 · பால 7.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பருதி வானவன் நிலம் பசை அறப்பருகுவான் - சூரிய தேவன் நிலத்தின் ஈரத்தை மிகுதியாகப் பருகும் பொருட்டு; விருது மேற்கொண்டு உலாம் - வெற்றியை மேற்கொண்டு உலாவும்; வேனிலே அல்லது இருது வேறு இன்மையால் - வேனிற் காலமேயல்லாது (அந்நிலத்தில் வேறுகாலம் இல்லாமையால்; எரிசுடர்க் கடவுளும் கருதின் - நெருப்புத் தேவனும்கூட இப்பாலையின் வெப்பத்தை எண்ணுவானானால்; உள்ளமும் வேம் - அந்தத் தீக்கடவுளின் இதயமும் வெந்து போகும்; காணின் நயனமும் வேம் - இப்பாலையைக் கண்டுவிட்டால் கண்களும் வெந்து போகும்.
பின் இரண்டடிகள் உயர்வு நவிற்சி யணியாகும். பருதிவானவன்: சூரிய தேவன். பசை: ஈரம். விருது: வெற்றி. உலாம்: உலாவும் என்பதன் இடைக் குறை. இருது: ருது: பருவம் என்பது பொருள். வேம்: வேகும் என்பதன் மரூஉ.
சூரியன் நிலத்தின் ஈரம் முழுவதையும் பருகுவேன் எனச் சூளுரைத்து - உலாவுகின்ற அப்பாலை நிலத்தில் வேனில்காலம் தவிர வேறுபருவமே இல்லாமையால் - அந்தப்பாலையின் வெப்பம் பற்றி நினைக்கும் தீக்கடவுளின் மனமும் வெந்துபோகும் பார்த்த கண்களும் வெந்துபோகும் என்பது கருத்து. இது முதல் 12 பாடல்கள் பாலை நிலத்தின் தோற்றத்தையும் தன்மையையும் கூறுவனவாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the sun-god, bent on drinking the earth until no moisture is left,
- roams there having taken up victory, and no season other than summer
- exists in that land, even the god of blazing fire
- would have his heart burn if he but thought of it, and his eyes burn if he saw it.
What the poem says
Irāmaṉ and Ilakkuvaṉ follow Vicuvāmittiraṉ into the desert tract (pālai) where the demoness Tāṭakai lives. This verse opens a run of about twelve stanzas describing that wasteland.
The sun has sworn to drink every drop of moisture from the soil, so the land knows only summer. The last two lines are deliberate hyperbole: the place is so hot that even Agni, the fire-god himself, would be scorched in mind by thinking of it and in his eyes by looking at it.