கம்பராமாயணம் 334 · பால 7.4

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அவ் வயின்
சென்று, உவந்து எதிர் எழும் செந்நெறிச் செல்வரொடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பருதி மண்டிலம் அகன்
குன்றில் நின்று இவர ஓர் சுடு சுரம் குறுகினார்.

பொருள் · Meaning in Tamil

என்று அவ் அந்தணன் இயம்பலும் - என்று அம்முனிவர் சொல்லவே; வியந்து சென்று - இராம இலக்குவர் ஆச்சரியப்பட்டுப் போய்; உவந்து எதிர்எழும் - மகிழ்ந்து, எதிர்கொண்டழைக்க எழுந்து வரும்; செந்நெறிச் செல்வரோடு - செம்மையான நெறியில் செல்பவராகிய முனிவர்களுடன்; அவ்வயின் அன்று உறைந்து - அவ்விடத்தில் அன்று தங்கியிருந்து; அலர்கதிர்ப் பரிதி மண்டிலம் - விரிந்த கதிர்களையுடைய சூரியன்; அகன்குன்றினின்று இவர - அகன்ற மலையிலிருந்து மேலே ஏற; ஓர் சுடுசுரம் குறுகினார் - (மூவரும்) ஒரு பாலைவனத்தை நெருங்கினர்.

செம்மை நெறி: செந்நெறி (நன்னெறியாளர் என்றுமாம்). அலர்கதிர்: விரிகதிர். பரிதிமண்டலம்: சூரியமண்டலம். அகன்குன்று: உதயகிரி. இவர்தல்: ஏறுதல். குறுகி: சேர்ந்து. இச்சோலை யாதெனக் கேட்ட ராமனுக்கு, சிவபிரான் யோகுசெய்த இடமென முனிவன் கூறி, அதன் தூய்மையைச் சிறப்பித்துக் கூற, பின் மூவரும் தொடர்ந்து சென்று ஒரு பாலையை எய்தினர் என்பது பொருள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the Brahmin had said this, they marvelled; and
  2. with the virtuous ones of the true path who came and rose to meet them,
  3. they stayed there that day; and as the orb of the sun with its spreading rays
  4. climbed from the broad mountain, they drew near a scorching desert.

What the poem says

The princes stay the night in the hermitage with the sages who welcome them. Next morning, as the sun rises over the eastern mountain, the three reach a burning wasteland.

In the following verses the sage will teach the princes two mantras to protect them from its heat and tell them the story of the demoness Tāṭakai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu av antaṇaṉ iyampalum viyantu av vayiṉ
ceṉṟu, vantu etir eḻum cen neṟic celvarōṭu
aṉṟu uṟaintu, alar katirp pariti maṇṭilam akaṉ
kuṉṟiṉniṉṟu ivara ōr cuṭu curam kuṟukiṉār.