கம்பராமாயணம் 333 · பால 7.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பற்று அவா வேரொடும் பசை அற - உலகப் பொருள்களில் பற்றியுள்ள ஆசை வேரொடு பற்றற்றுப் போகவும்; பிறவி போய் முற்ற - அவ்வாசையின் பயனாய் வரும் பிறவி நோய் சென்று முடியவும்; வால் உணர்வு மேல் - மெய்யுணர்வு பெற்ற; முடுகினார் அறிவு - விரைந்து சென்று அடைகின்ற ஞானிகளின் ஆன்மஞானம்; சென்று உற்றவானவன் - சென்று அடைகின்ற இறைவனாகிய சிவபெருமானே; இருந்து யோகு செய்தனன் எனில் - இங்கிருந்து யோகத்தைச் செய்தான் என்றால்; இதன் தூய்மை சொற்றலாம் அளவதோ - இதன் தூய்மை சொல்லத் தக்க அளவுடையதாகுமோ? ஆகாது.
அவா வேரொடும் பசையறுதல்: ஆசை வேருடன் பற்றறுதல். போய் முற்றல்: முற்றிப் போதல். வால் உணர்வு: மெய்யறிவு. யோகு: யோகம் (கடைக்குறை). அளவது: அளவுடையது. சிவபெருமான் ஆன்ம ஞானிகளுக்குத் தலைவன் என்றபடி.
உலகப் பொருள்களின் மீதுள்ள பற்று ஒழிந்தால் - அந்தப் பற்றுக் காரணமாக வரும் பிறவிதரும் - பிறவி நீங்க ஆன்ம ஞானம் உண்டாகும். அந்த ஞானத்தால் இறைக்காட்சி பெறலாம் என்பதால் “வாலுணர்வு மேல்வர முடுகினார் அறிவு சென்றுற்ற வானவன்” எனச் சிவபெருமானைச் சிறப்பித்துக் கூறினார். அவன் இருந்து தவம்செய்த இடமாதலின் இதன் தூய்மை சொல்ல இயலாததென்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When the god whom the minds of those reach who press on to pure knowledge,
- their clinging desire cut off root and all, their births ended,
- stayed here and practised yoga,
- can the purity of this place be told in words?'
What the poem says
Vicuvāmittiraṉ adds that Śiva himself sat here in yogic meditation. Śiva is the god reached by those whose desire has been uprooted, whose births have ended, and who have attained pure knowledge.
A place where such a god practised austerities is purer than words can say.