கம்பராமாயணம் 332 · பால 7.2

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாரணத்து உரிவையான், மதனனைச் சினவும் நாள்
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்
ஆரணத்து உறையுளாய்! அங்கநாடு; இதுவும் அக்
காரணக் குறி உடைக் காமன் ஆச்சிரமம் ஏ.

பொருள் · Meaning in Tamil

ஆரணத்து உறையுளாய் - வேதங்களை வாழும் இடமாக உடையவனே; வாரணத்து உரிவையான் - யானைத் தோலைப் போர்த்தவனாகிய சிவபிரான்; மதனனைச் சினவு நாள் - மன்மதனைக் கோபித்த நாளில்; ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் - பசையற்றுப் போய் அவனது சிதைந்த உடல் இங்குச் சிதறி வீழ்ந்ததால்; இவணெலாம் அங்கநாடு - இந்த இடமெல்லாம் அங்க நாடு என அழைக்கப்படும் இடமாகும்; இதுவும் அக் காரணக்குறி உடைகாமன் ஆச்சிரமமே - இந்த இடமும் அந்தக் காரணக் குறியை உடைய காமன் ஆச்சிரமம் என்று சொல்லப்படுவதாகும்.

வாரணம்: யானை. உரிவை: உரித்த தோல். யானை உரித்த தோலைச் சிவபிரான் போர்வையாக உடையவன் என்பது புராணச் செய்தி. தனது யாக நிலையைக் கெடுத்து, காம இச்சையை யுண்டாக்குவதற்கு மலர்க்கணைகளை எய்த மன்மதனைக் கோபித்து எரித்த செய்தி புராணத்துட் கூறப்பட்டதாகும்; ஈரம்: உடற்பசை. உகுதல்: சிதறுதல். ஆரணம்: வேதம். ஆரண+துறை எனவும், ஆரணத்து+உறையுள் எனவும் இருவிதமாகவும் விரித்துப் பொருள் கூறலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he who wears the elephant's hide raged against Mataṉaṉ,
  2. his body, its moisture gone, fell scattered here; so all this region,
  3. O you whose dwelling is the Vedas, is the Aṅga country; and this too
  4. is Kāmaṉ's hermitage, a name given for that reason.

What the poem says

The sage explains the place names. Because Kāmaṉ's body (aṅgam) fell here in burnt fragments, the land is called Aṅga, and this grove is called Kāmaṉ's hermitage.

Śiva is described by his well-known emblem, the hide of an elephant he flayed. Irāmaṉ is addressed as 'you whose dwelling is the Vedas'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāraṇattu urivaiyāṉ, mataṉaṉaic ciṉavu nāḷ
īram aṟṟum aṅkam iṅku ukutalāl, ivaṇ elām
āraṇattu uṟaiyuḷāy! aṅka nāṭu; ituvum ak
kāraṇak kuṟiyuṭaik kāmaṉ ācciramamē.