கம்பராமாயணம் 3377 · ஆரணிய 7.228
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நோக்கிய மானை நோக்க - எதிரில் விழித்து நின்ற மானை உற்றுப் பார்த்து; நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன் - இராமன் கூரிய அறிவின் துணை கொண்டு எதனையும் சீர்தூக்கப் பார்க்கவில்லை, நன்று இது என்றான் - இந்த மான் மிக அழகியது என்று தானும் கூறினான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்? - அச் சொல்லின் பொருள் நுட்பத்தை ஆராய்ந்து கூற முடியுமோ? முடியாது); சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது - அனந்தசயனத்திலிருந்து மண்ணுலகில் வந்து அவதாரம் செய்தமை; தேவர் செய்த பாக்கியம் உடைமை அன்றோ - தேவர்கள் ஆற்றிய புண்ணியம் என்று கூறலாம் அல்லவா?; அன்னது பழுது போமோ? - அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ? (போகாது என்றபடி).
தேவர் செய்த பாக்கியத்தால் இராமாவதாரம் நிகழ்ந்தமையின், மாய மானை இராமனும் தொடர ஆசைப்பட்டதன் கருத்து மறைமுகமாகப் புலனாகின்றது என்று சுட்டிக் காட்டினார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at the deer that looked at him, he weighed nothing
- with his keen mind, and said, 'This is fine'; can its meaning be told?
- That he left his couch, the serpent, and was born here,
- is that not the good fortune the gods had earned? Could that come to nothing?
What the poem says
Irāmaṉ looks at the deer and, without using his sharp judgement, says only, 'It is lovely.' The poet asks how such a lapse can be explained, and gives the answer.
Viṣṇu left his serpent bed on the ocean and was born as Irāmaṉ because of the merit the gods had earned. That merit cannot be wasted. His being taken in by the deer is part of the divine plan that will lead to Irāvaṇaṉ's death.