கம்பராமாயணம் 3379 · ஆரணிய 7.230
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரிசிலை மறை வலோனே - கட்டமைந்த வில்லின் கலையாகிய வேதத்தில் வல்லவனே!; மான் இதன் வடிவை - இம்மானின் உருவத்தை; உற்ற - நெருங்கிக் கண்ட; அரிவையர் மைந்தர் - பெண்களானாலும் ஆண்களானாலும்; யாரே ஆதரம் கூர்கிலாதார்? - (இதனிடம்) ஆசை கொள்ளாதவர் ம்க் இருக்கமுடியுமா?; உருகிய மனத்த ஆகி - உள்ளம் கரைந்துருகுவனவாகி, ஊர்வன, பறப்ப யாவும் - ஊர்ந்தும் பறந்தும் செல்லும் அனைத்து விலங்குகளும் பறவைகளும்; விரிசுடர் விளக்கம் கண்ட - எரியும் நெருப்புச் சுடரின் வெளிச்சம் பார்த்து; விட்டிலின் வீழ்வ - விழும் விட்டில் பூச்சிகளைப் போல் விரும்பி அம் மானைச் சூழ்வதை; காணாய் - நீ பாராய் (என்றான் இராமன்)
உயிரினங்கள் அனைத்தும், ஆண் பெண் ஆன மானுடரும் இம் மானைக் கண்டு மயங்குவதால் சீதையின் மயக்கத்தில் வியப்பில்லை என இராமன் இலக்குவனுக்கு அமைதி காட்டுகின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who are master of the Veda of the banded bow! Who is there, woman or man,
- that comes near this deer's form and does not feel desire?
- With melting hearts, all that crawl and all that fly
- fall towards it like moths that see a spreading flame: look!'
What the poem says
Irāmaṉ, still taken with the deer, points out to Ilakkuvaṉ, a master of archery, that every man and woman who sees it longs for it. All the creatures that crawl and fly crowd round it like moths drawn to a flame.
So Cītai's longing is nothing strange. He says this to calm his brother's doubts.