கம்பராமாயணம் 3380 · ஆரணிய 7.231
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆரியன் - மேன்மை மிக்க இராமன்; அனைய கூற - இவ்வாறு எடுத்துக் கூறவும்; அன்னது தன்னை நோக்கி - அந்த மானை உற்றுப் பார்த்து; 'இது சீரியது அன்று - இம்மான் இயற்கையானது அன்று; என்று சிந்தையில் தெளிந்த தம்பி - என்று தன் மனத்தில் உறுதி கொண்ட தம்பி இலக்குவன்; வேரி அம் தெரியல் வீர - மணம் கமழ்கின்ற மாலையணிந்த வீரனே; ஈண்டு கண்டது கனக மானேல் - இங்குக் காணப்படுவது பொன்மானாக இருக்கிற தென்றாலும்; என்னை காரியம்? - அதனால் நமக்கு என்ன பயன்?; மீள்வதே மேன்மை - அதனை விட்டு நீங்கி வருவதே மேலான செயல், என்றான் - என்று கூறினான்.
அது பொன்மயமான மான் என்பதால் நமக்கு என்ன பயன் என்ற இலக்குவன் வினாவில், மாயையிலிருந்து விரைவில் இராமன் மீள வேண்டுமே என்ற கவலை மேலோங்கி நிற்கின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the noble one spoke so, looking hard at the thing,
- the younger brother, clear in his mind that it was not genuine, said,
- 'What use is it? Even if what we see here is a golden deer,
- hero with the fragrant garland, it is best to turn back.'
What the poem says
Ilakkuvaṉ studies the deer and is sure it is unnatural. Even if it really is a golden deer, he asks, what good will it do them?
Behind his question is a single worry: that his brother should break free of the illusion quickly and turn away from it.