கம்பராமாயணம் 3382 · ஆரணிய 7.233

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஐய , நுண் மருங்குல் நங்கை அஃது உரைசெய்ய , ஐயன்
' செய்வென் ' என்று அமைய , நோக்கித் தெளிவு உடைச் செம்மல் செப்பும் ;
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த
கைதவ மான் என்று அண்ணல் ! காணுதி கடையின் ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

ஐய நுண் மருங்குல் நங்கை - 'உண்டோ, இல்லையோ' என ஐயுறத்தக்க சிறிய இடையை உடைய சீதையாகிய நங்கை, அஃது உரை செய்ய - இவ்வாறு தன் ஆசையை வெளியிட்டுப் பேச; ஐயன் - தலைவனாகிய இராமன்; செய்வென் என்று அமைய - இதோ பிடித்துத் தருகிறேன் என்று முடிவு கூற; நோக்கத் தெளிவுடைத் தம்பி - சிந்தனையில் தெளிவுடைய தம்பி இலக்குவன்; செப்பும் - தமையனிடம் கூறலானான்; 'அண்ணல்! - என் தலைவனே, வெய்ய வல்லரக்கர் - கொடுமையும் வன்மையும் உடைய அரக்கர்கள்; வஞ்சம் விரும்பினார் - வஞ்சனை செய்ய விரும்பியவராய்; வினையின் செய்த - தந்திரத்தால் இயற்றித் தந்த; கைதவ மான் என்று - மாயமான், என்று; கடையின் காணுதி - முடிவில் உணர்ந்து கொள்வாய்; என்றான் - என்று (எச்சரித்துக்) கூறினான்.

இலக்குவனின் விடாப்பிடியான அறிவுக் கூர்மையும் கடமை உணர்வும் இங்குப் புலனாகின்றன. ஐய நுண் இடை என்பதற்கு மிகவும் சிறிய இடை எனவும் பொருள் கொள்ளலாம்; ஐய எனின் நுட்பம் என்று பொருள்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the maiden of the doubtful slender waist said this, and the lord
  2. agreed, 'I will do it,' the younger brother, clear of sight, spoke:
  3. 'That it is a false deer made by the craft of cruel, mighty demons bent on deceit,
  4. my lord, you will see in the end.'

What the poem says

Cītai's waist is so slender one wonders whether it exists at all. When she makes her plea, Irāmaṉ agrees to catch the deer.

Ilakkuvaṉ, clear-sighted and dutiful, will not give way. He warns that in the end Irāmaṉ will find it is a trick made by cruel demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aiya, nuṇ maruṅkul naṅkai aḵtu uraiceyya, aiyaṉ
' ceyveṉ ' eṉṟu amaiya, nōkkat teḷivuṭait tampi ceppum;
veyya val arakkar vañcam virumpiṉār viṉaiyiṉ ceyta
kaitava māṉ eṉṟu aṇṇal! kāṇuti kaṭaiyiṉ ' eṉṟāṉ.