கம்பராமாயணம் 3383 · ஆரணிய 7.234
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாயமேல் - நீ கூறுவது போல் மாயமானாக இருக்குமாகில், வாளியின் மடியும் அன்றே - என் அம்புக்கு அது இரையாகும் அல்லவா?; மடிந்த போது - அவ்வாறு மரணமுறும் போது; காய் சினத்தவரைக் கொன்று - கொடிய சினம் கொண்ட அரக்கரை அழித்து; கடன் கழித்தோமும் ஆதும் - நம் கடமையை ஆற்றினவர்களும் ஆவோம்; (அன்றி); தூயதேல் - உண்மையான மானாக இருக்குமாகில், பற்றிக் கோடும் - பிடித்துக் கொண்டு வருவோம்; சொல்லிய இரண்டின் ஒன்று - இப்போது நான் கூறிய இரண்டில் ஏதேனும் ஒன்றை; தீயதே - தீமை என்று கூற முடியுமா?; உரைத்தி - சொல்லுவாயாக; என்றான் - என்று சொன்னான்; தேவரை இடுக்கண் தீர்ப்பான் - வானவர் துன்பத்தையும் அழிக்க வல்ல இராமன். மாயமான், மெய்யான மான் என்ற இரண்டு நிலையிலும் மானைப் பிடிப்பதால் தீமை இல்லை என உரைத்தான் இராமன். மாயமான் சாக்கிட்டு அவதார நோக்கம் நிறைவெய்தப் போவதால், 'தேவரை இடுக்கண் தீர்ப்பான்' என்று இராமனைக் குறித்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If it is illusion, it will die by my arrow, will it not? And when it dies,
- we shall have killed those of burning wrath and done our duty;
- if it is genuine, we shall catch it and take it; of the two things I have said,
- is either evil? Tell me,' said he who ends the sufferings of the gods.
What the poem says
Irāmaṉ reasons with his brother. If the deer is a demon's trick, his arrow will kill it, and killing demons is their duty. If it is a real deer, they will catch it.
Either way no harm can come. The poet calls him the one who frees the gods from their troubles, because this deer will lead, in the end, to the purpose of his coming: Irāvaṇaṉ's death.