கம்பராமாயணம் 3384 · ஆரணிய 7.235

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1' பின் நின்றார் எனையர் என்றும் உணர்கிலம் ; பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல் தேற்றாம் ; யாவது ஈது என்றும் ஓராம் ;
முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல் ,
பொன் நின்ற வயிரத் தோளாய் ! புகழுடைத் தரம் அன்று ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

பொன் நின்ற வயிரத் தோளாய் - பொன் போல் அழகிய வைரம் பாய்ந்த தோள்களை உடையவனே; பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் - இம் மாயமானை ஏவிப் பின்னே நிற்பவர் யாவர் என்றும் தெரியவில்லை; பிடித்த மாயம் - அவர்கள் கைக் கொண்டுள்ள மாயை, என் என்றும் தெளிதல் தேற்றாம் - எத்தகையது என்றும் உணர இயலவில்லை; யாவது ஈது என்றும் ஓராம் - இம் மான் தான் எத்தகையது என்றும் எண்ணிப் பார்க்க முடியவில்லை (அதனால்); முன் நின்ற முறையின் நின்றார் - நமக்கு முன்னே நீதி நெறியில் நின்ற பெரியோர்கள்; முனிந்து உள - வெறுத்து ஒதுக்கிய; வேட்டம் முற்றல் - வேட்டைத் தொழிலில் ஈடுபடுதல்; புகழ் உடைத்தாம் அன்று - புகழ் தரும் செயல் அன்று; என்றான் - என்று (இலக்குவன்) கூறினான்.

வேறு காரணங்களுக்கு இசையாத இராமனிடம் முன்னோர் வெறுத்த வேட்டைத் தொழில் வேண்டாம் என்று புதிய உத்தியை இலக்குவன் கையாளுகின்றான். சாது விலங்குகளை வேட்டையாடுதல் பெரியோர்களால் விலக்கப்பட்டது; ஆதலின் இலக்குவன் இம்மானுக்கு இடர் செய்ய வேண்டா என்று பேசிப் பார்க்கிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'We do not know who they are who stand behind it; the illusion they have taken up,
  2. what it is we cannot make out; what this thing is we cannot tell;
  3. to go on a hunt that those who stood in the right way before us condemned,
  4. you of strong shoulders hung with gold, brings no glory,' he said.

What the poem says

Ilakkuvaṉ tries a new argument. They do not know who is behind the deer, what kind of magic they use, or what the creature really is.

And the righteous elders before them condemned hunting harmless animals for sport, so chasing it would bring Irāmaṉ no honour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' piṉ niṉṟār iṉaiyar eṉṟum uṇarkilam; piṭitta māyam
eṉ eṉṟum teḷital tēṟṟām; yāvatu ītu eṉṟum ōrām;
muṉ niṉṟa muṟaiyiṉ niṉṟār muṉintuḷa vēṭṭam muṟṟal,
poṉ niṉṟa vayirat tōḷāy! pukaḻ uṭaittām aṉṟu ' eṉṟāṉ.