கம்பராமாயணம் 3385 · ஆரணிய 7.236
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பகையுடை அரக்கர் என்றும் - நமக்குப் பகைவரான அரக்கர் பெயரைக் கூறியும்; பலர் என்றும் - அவர்கள் எண்ணிக்கையால் பலர் என்று பயமுறுத்தியும்; பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும் - அவர்களின் மாயத் தந்திரங்கள் மிகுதியானவை என்று கூறியும்; பூண்ட விரதத்தை - அவர்களை அழிக்க நாம் கொண்ட விரதத்தை, விடுதும் என்றல் - விட்டு விடக் கருதுதல்; நகை உடைத்து ஆகும் அன்றே - பிறர் கேட்டுச் சிரிக்கத் தக்கதாகி விடும், அல்லவா? ஆதலின் இது நன்று - ஆகையால், இம்மானைப் பிடிக்கும் செயலில் பிழையில்லை; என்னா - என்று; அந்நாள் - அப்போது; சதுமுகன் தாதை - பிரமனின் தந்தையாகிய இராமன்; தகையுடைத் தம்பிக்கு - பெருமைமிக்க தம்பி இலக்குவனுக்கு; சொன்னான் - எடுத்துரைத்தான்.
இராமனும் தன் கொள்கையில் பின் வாங்காது இலக்குவனிடம் நம் விரதத்தினின்றும் மாறி நிற்றல் ஆகாது என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To say they are hostile demons, that they are many, that the illusion they practise
- is great, and so to abandon the vow we have taken,
- would be laughable, would it not? Therefore this is right,'
- so, that day, the father of the four-faced one told his worthy brother.
What the poem says
Irāmaṉ, father of four-faced Brahmā, will not give way either. They have vowed to destroy the demons.
To drop that vow because the demons are hostile, many in number and full of tricks would make them a laughing-stock. So he says there is nothing wrong in going after the deer.