கம்பராமாயணம் 339 · பால 7.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாரும் ஓடாது - நிலமகளும் (வெப்பம் பொறுக்காது) அந்த நிலத்தை விட்டு ஓடிப் போகநினைத்தாலும் இயலாது; நீடாது எனும்பாலதே - ஏனெனில் இடத்தை விட்டுப் பெயராத தன்மை உடையவளாதலாலே; சூரும் ஓடாது - பாலை நிலத்துக்குரிய காளியும் நீங்காள்; கூடாது அரோ - நிலத்தெய்வம் நிலத்தை விட்டு நீங்கமுடியாது; மா மாகம் மீ - அந்நிலத்துக்கு மேலே பெரிய வானத்திலே; சூரியன் தேரும் ஓடாது - பாலையின் வெப்பம் தாங்காது குதிரைகள் சோர்ந்து போவதால் பரிதியின் தேரும் ஓடாது; தேரின் நேர்காரும் ஓடாது - ஆராயின், அந்நிலத்துக்கு நேராக மேகமும் ஓடாது; நீள் காலும் ஓடாது - வீசுகின்ற காற்றும் அங்குச் செல்லாது.
'உம்மை' எல்லாம் எண்ணுப் பொருளன. பார்: நிலமகள். சூர்: கொற்றவை. பாலது: தன்மையது. அரோ இரண்டு அசைகள். மாகம்: வானம். கால்: காற்று. கார்: மேகம் (கருமையினடியாகப் பிறந்தது).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The earth cannot run away, since its nature is never to leave its place;
- the fierce goddess cannot run away either, for she may not leave it; the sun's
- chariot does not run in the great sky above; and, if you consider it, straight over that land
- the cloud does not run, nor does the long wind run.
What the poem says
Everything that could flee the heat is stuck. The earth-goddess would run if she could, but the earth by nature stays put; Korravai, the fierce goddess who presides over desert land, cannot abandon her own territory.
Overhead, the sun's horses flag in the heat so its chariot stalls, and neither clouds nor wind will pass over the place. The repeated "does not run" (ōṭātu) gives the verse its stuck, breathless rhythm.