கம்பராமாயணம் 340 · பால 7.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெயில் மண் கிழித்திட - சூரிய வெப்பம் நிலத்தை வெடிக்கச் செய்வதால்; கண்கிழித்து உமிழ் விடக் கனல் - கண்களைக் கிழித்துக் கொண்டு உமிழ்கிற விட நெருப்பை உடைய; அரா அரசு - பாதாளத்திலுள்ள பாம்பரசனது; பல்மணி, கார்விண் கிழித்து ஒளிரும் மின் அனைய - பல பணாமணிகளிலிருந்தும், கரிய மேகங்களைப் பிளந்து கொண்டு ஒளிவீசும் மின்னலுக்கு ஒப்பாக; எழும் சுடர்கள் - தோன்றுகின்ற மணிகளின் செவ்வொளியானது; மண்மகள் உடல் புண்கிழித்திட - நிலமகளின் உடல் புண்ணைக் கிழித்திட, எழும் குருதி போலுமே - தோன்றுகின்ற ரத்தம் போன்றதாகும்.
'கண்கிழித்து' என்பதற்கு ஆயிரம்தலைகள் உடைய அரவரசனுக்கு உரிய இரண்டாயிரம் கண்களையும் கிழித்து கொண்டு எனப்பொருள் கொள்க. “கார் விண்” என்பது 'கிழித்தொளிரும் மின்' என்ற குறிப்பால் மேகம் என்னும் பொருள் பெற்றது. தற்குறிப்பேற்றணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the heat splits the ground, the many gems of the serpent-king,
- who spits poison-fire that tears out through his eyes, gleam up like lightning
- tearing the dark sky; and the rays that rise through the cracked earth
- look like blood welling as a wound is torn open in the body of the earth-goddess.
What the poem says
The sun's heat cracks the ground so deeply that the light of the jewels worn on the hoods of Ātiṭēṭaṉ, the thousand-headed serpent-king who lives beneath the earth, flashes up through the fissures like lightning through black cloud.
The poet imagines that red glow as blood from a wound in the body of the earth-goddess. The commentary names the figure as poetic fancy, assigning an imagined cause to what is seen.