கம்பராமாயணம் 341 · பால 7.11

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின் வாய்
முழங்கு திண் கரி புகும்; முடுகி மீ மிசை
வழங்கு வெம் கதிர் சுட மறைவு தேடி ஏ.

பொருள் · Meaning in Tamil

புழுங்கு வெம்பசியொடு - புழுக்கத்தைத்தரும் மிக்க பசியுடன்; புரளும் பேரரா - அந்தப் பாலையில் புரண்டுகொண்டிருக்கும் பெரிய பாம்பானது; விழுங்க வந்து எழுந்து - எதிரில் வருபவர்களை விழுங்க; எதிர் விரித்த வாயின்வாய் - விரித்துக் கொண்டிருக்கும் அதன் வாயில்; மீமிசை வழங்கும் வெம்கதிர்சுட - வானத்திலே சூரியன் வழங்கும் வெப்பக் கதிர்கள் சுடுதலால்; மறைவு தேடி - மறைந்து கொள்ளுதற்குரிய நிழல் தேடி; முழங்கு திண்கரி முடுகிப்புகும் - பிளிறும் யானைகள் வேகமாக நுழையும்.

புழுங்கல்: வெப்பத்தால் புழுங்குதல். அரா: பாம்பு (அரவு). பேரரா: பெரிய பாம்பு. கரி: யானை. மீமிசை: மேலே “வானம்” என்ற பொருள் தந்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the mouth of the huge python, writhing with stifling fierce hunger,
  2. which has reared up to swallow and spread its jaws wide to meet them,
  3. the strong trumpeting elephants rush in, hurrying,
  4. because the fierce rays from high above burn them, and they seek shade.

What the poem says

A grotesque picture of the desert's cruelty. A starving python lies with its jaws spread to catch whatever comes; the elephants, scorched by the sun and desperate for any shade, mistake that dark open mouth for shelter and rush straight into it.

The heat is so unbearable that the largest beasts walk into death to escape it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puḻuṅku vem paciyoṭum puraḷumpēr arā
viḻuṅku vantu eḻuntu etir viritta vāyiṉvāy
muḻaṅku tiṇ kari pukum; muṭuki mīmicai
vaḻaṅku veṅ katir cuṭa maṟaivu tēṭiyē.