கம்பராமாயணம் 342 · பால 7.12

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏக வெம்கனல் அரசிருந்தகாட்டினில் - கொடிய கனலே தனித்தலைவனாக அரசு செலுத்திவரும் பாலைநிலத்திலே; காகமும் கரிகளும் கரிந்து சாம்பின - வானில் பறக்கும் காக்கைகளும் கானில் திரியும் யானைகளும் வெந்து உயிரிழந்து கிடந்தன; மாக வெங்கதிர் எனும் - மிகக் கொடும்கனல் எனக்கூறப்படும்; வடவைத் தீச்சுட - “வடவா முகாக்கினி” நெருப்புச் சுடவே; மேகமும் கரிந்து - வானத்தில் திரியும் மேகங்களும் வெந்து கருகி; இடை வீழ்ந்த போலும் - பாலைநிலத்திடையே வீழ்ந்துள்ளன போல (காணப்படுகின்றன.

ஏகம்: ஒன்று, தனிமை, போன்ற பல பொருள் உடைய சொல். கனல்: வெப்பம். அரசிருந்து: ஆட்சிபுரிந்து “காகமும்” என்று கூறியதால் விண்ணில் பறக்கும் பறவைக்கூட்டங்களும் “கரி” என்றதால் மண்ணில்திரியும் விலங்கினங்களும் உபலட்சணத்தால் கொள்ளப்படும். மற்றவைபற்றிக் கூறவேண்டாதாயிற்று. கரிதல்: வெந்துருகிப் போதல். மாகம்: பெருமை! வடவைத்த கடல்நடுவே - குதிரை முகவடிவிலே இருக்கும் பெரு நெருப்பு 'ஊழிப்ெ ரநத' என உரைப்பர் புராண வழக்கு. “மேகமும்” என்பதிலுள்ள “உம்மை” தட்பத்தைக் குறிப்பது எனினும் அதனையும் வேகச்செய்வது கனல் என்ற சிறப்பை உணர்த்தும்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the forest where fierce fire alone sat as king,
  2. crows and elephants lay charred and dead,
  3. as if, scorched by the submarine mare-fire that is the great sky's fierce sun,
  4. the clouds themselves had been charred and had fallen there.

What the poem says

In this desert, heat rules as sole king. Black carcasses of crows and elephants lie scattered over the ground; birds of the air and beasts of the land are both meant, so nothing else needs mentioning.

The poet likens the sun to the vaṭavai, the mythical fire shaped like a mare's head that burns beneath the ocean and is said to blaze out at the end of an age. The dark heaps look like rain-clouds that this fire has burned black and brought down, so even the clouds, the very source of coolness, have not escaped.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēka veṅ kaṉal aracirunta kāṭṭiṉil
kākamum karikaḷum karintu cāmpiṉa
māka veṅkatir eṉum vaṭavait tīc cuṭa
mēkamum karintu iṭai vīḻnta pōlumē;