கம்பராமாயணம் 343 · பால 7.13

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கானகம் அத்து இயங்கிய கழுதின் தேர் குலம்,
தான் அகம் கரிதலில் தலைக்கொண்டு ஓடி போய்
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்தது ஏ.

பொருள் · Meaning in Tamil

கானகத்து இயங்கிய - அந்தக்கொடிய பாலைவனத்திலே விளங்கித் தோன்றிய; கழுதின் தேர்க்குலம் - பேய்த்தேராகிய கானல் நீர்; அகத்து தான் எழுதலால் - அப்பாலை வனத்தகத்து வெம்மை தான் எழுதலாலே; தலைக்கொண்டு ஓடிப்போய் - (அது) மிகுதிப்பட்டு ஓடிச்சென்று; மேல் நிமிர்ந்து எழுந்திடில் - மேலே நிமிர்ந்து எழுந்து விட்டால்; விசும்பு வேம் எனா - ஆகாயம் வெந்து போகும்என நினைத்து; வானவர்க்கு இரங்கி - விண்ணுலகத்தினரான தேவர்களுக்காக இரங்கி; நீர்வளைந்தது ஒத்ததே - நீர்க்கடவுள் (வருணன்) அந்த வெப்பத்தை மேலே செல்லவிடாமல் கீழ்நோக்கிச் செலுத்தியது போன்றது.

கான்அகம்: கானகம் என்ற ஒரு சொல்லாய்க் காட்டை உணர்த்தும். கழுது: பேய். கழுதின் தேர்: பேய்த்தேர் (கானல் நீர்). குலம்: கூட்டம். தலைகொண்டோடுதல்: வரம்பு மீறுதலாம். மேல்: வானம் என்றுமாம்.

அப்பாலை நிலம் முழுமையும் காணப்படும் கானல் நீர் மேலெழுந்தால் விண்ணையும் வேகச்செய்யுமே என வானவர்க்கு இரக்கப்பட்டு நீர்க்கடவுள் (வருணன்) பாலை நிலம் முழுமையும் நீரினால் வளைத்துக் கொண்டது போலக் காணப்பட்டது, என்பது கருத்து. இது தற்குறிப்பேற்ற அணியாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hosts of mirage, the demons' chariots that moved across that forest,
  2. because the heat rose up inside it, overflowed and ran on;
  3. thinking, if this rises straight up, the sky too will burn,
  4. it was as though water, pitying the gods, had closed around it.

What the poem says

The shimmering mirage that covers the desert is called in Tamil "the demon's chariot." The poet gives it a fanciful cause: the heat swelling inside the land threatened to rise and scorch heaven, so Varuṇaṉ, the water-god, took pity on the gods and ringed the whole desert with water to hold it down.

What looks like water lying all over the sand is that protective ring. The commentary names this as poetic fancy, imagining a cause for what is seen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṉakattu iyaṅkiya kaḻutiṉ tērk kulam,
tāṉ akattu eḻutalāl talaikkoṇṭu ōṭippōy
mēl nimirntu eḻuntiṭil vicumpum vēm eṉā
vāṉavarkku iraṅki nīr vaḷaintatu ottatē.