கம்பராமாயணம் 344 · பால 7.14

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏய்ந்த அக் கனல் இடை எழுந்த கானல் தேர்
காய்ந்த அக் கடும் வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் கால் உடைப் பளிக்குப் பீடம் ஏ.

பொருள் · Meaning in Tamil

ஏய்ந்த அக்கனலிடை - அப்பாலை வனத்திலே பொருந்திய அந்த நெருப்பு மயமான நிலத்திலே; எழுந்த கானல்தேர் - தோன்றிய பேய்த்தேரின் தோற்றம்; காய்ந்த அக்கடு வனம் - எல்லாம் காய்ந்து போன கடுமை வாய்ந்த அப்பாலைவனத்தை; காக்கும் வேனிலின் வேந்தனுக்கு - ஆட்சிபுரியும் வேனில்காலம் என்னும் அரசனுக்கு; அரசு வீற்று இருக்க - திருவோலக்கமா வீற்றிருக்க; செய்தது ஓர் - செய்யப்பட்டதாகிய ஒப்பற்ற ஒரு; பாய்ந்த பொன் கால்உடை - உருக்கிப் பாய்ந்த பொன்னாலான கால்களை உடையதுமான; பளிங்குப் பீடமே - பளிங்கினால் செய்த ஆசனமே போலுமாம்.

ஏய்ந்த: பொருந்திய. அக்கடுவனம்: அதிக வெப்பமான பாலைவனம். வேந்து: வேனில் அங்குத் தனியாட்சி புரிவதால் இவ்வாறு கூறினார். பாய்ந்த பொன்: உருக்கிப் பாய்ச்சிய பொன். பீடம்: இருக்கை. அப்பாலைவனத்துப் பேய்த்தேரின் தோற்றம் வேனில் வேந்தன் அங்குத் தனியரசு செய்ய - அவன் அமர்வதற்காக அமைந்த பளிங்குப் பீடம் போன்றிருந்தது என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mirage that rose amid that pervading fire
  2. was a crystal throne with legs of molten gold, one of a kind,
  3. made so that the king Summer, who guards
  4. that scorched and cruel forest, might sit in state upon it.

What the poem says

Another fanciful image for the mirage. Summer rules this desert as its sole king, and the glassy shimmer over the burning ground looks like a crystal throne set up for him, its legs of poured gold being the glare of the hot sand beneath.

The figure turns the season into a monarch holding court over his scorched realm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēynta ak kaṉaliṭai eḻunta kāṉal tēr
kāynta ak kaṭu vaṉam kākkum vēṉiliṉ
vēntaṉukku aracu vīṟṟirukkac ceytatu ōr
pāynta poṉ kāluṭaip paḷikkup pīṭamē.