கம்பராமாயணம் 345 · பால 7.15

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தா வரும் இருவினை செற்று - தாவி வருகின்ற நல்வினை, தீவினையாகிய இரு வினைகளையும் அழித்து; தள்ள அரும் மூவகைப் பகை அரண்கடந்து - தள்ளுதற்கு அரிய மூன்று வகைப்பட்ட உயிர்ப் பகை ஆகிய காவலையும் கடந்து; முத்தியில் போவது புரிபவர்மனமும் - வீடு பேறடைவதற்குரிய காரியங்களையே செய்யும் ஞானிகள் மனமும்; பொன் விலைப் பாவையர் மனமும் - பொன்னுக்குத் தமது மேனியை விலைகூறும் விலை மாதர்களின் மனமும்; போல் பசையும் அற்றதே - (எவ்வாறு பசையற்றிருக்குமோ அதுபோல்) இப்பாலை வனமும் பசையற்றுக் கிடந்தது.

தாவரும்: தாவிவரும். நல்வினையும் பிறப்புக்குக் காரணம் என்பதால் இருவினையும் “செற்று” என்றார் மூவகைப் பகையாவது, காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றுமாம். இருவினை செற்று மூவகைப்பகை வென்றவர்களே வீடு பேறடைதற்கு உரியர் என்பதால் 'முத்தியில் போவது புரிபவர்' என்றார். ஞானிகள் பற்றற்றவர்கள். பாவை: உவமை யாகு பெயர் விலை மாதர் பசையற்றவராதல் - தம்மை நாடிவந்தவரிடம் இரக்க மற்றிருத்தலாம். எனவே அப்பாலைநிலம் முத்தியை விரும்பும் ஞானிகளின் மனம் போலவும் பொன் விலைப்பாவையர் மனம் போலவும் பசையற்றிருந்தது என்பது கருத்து. தா: துன்பமும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the minds of those who destroy the two kinds of deeds that leap upon them,
  2. cross the fortress of the threefold enemy that is hard to thrust aside,
  3. and strive to pass into liberation, and like the minds
  4. of doll-like women who sell themselves for gold, it was without any moisture.

What the poem says

The word pacai means both moisture and attachment or tenderness, and the verse plays on both senses. The desert is as dry as the mind of a sage seeking liberation, who has destroyed both good and bad karma (good deeds too bind one to rebirth) and conquered the three enemies, desire, anger and delusion.

It is equally as dry as the heart of a courtesan who sells her body for gold and feels nothing for those who come to her. Two opposite kinds of people are paired here because neither has any "moisture" in the heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāvarum iru viṉai ceṟṟut taḷḷa arum
mūvakaip pakai araṇ kaṭantu muttiyil
pōvatu puripavar maṉamum poṉ vilaip
pāvaiyar maṉamum pōl pacaiyum aṟṟatē.