கம்பராமாயணம் 346 · பால 7.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொரி பரல் படர் நிலம் - சூரிய வெப்பத்தால் பொரிந்துள்ள சிறுகற்கள் எங்கும் விரிந்துகிடக்கும் அந்தப் பாலைவனம்; பொடிந்து கீழ் உற விரிதலின் - பிளவுபட்டு, பாதாளத்துக் கீழும் அகழ்ந்து போயிருப்பதால்; பெருவழி விளங்கித் தோன்றலால் - பெருத்த இடைவெளி விளக்கமாகத் தோன்றுவதால்; அரி மணிப்பணத்து அரா அரசன் நாட்டினும் - பொன்னிறமும், மணியையும் உடைய பாம்பரசனது நாடாகிய நாகலோகத்தினும்; எரிகதிர்க்கு இனிதுபுக்கு இயங்கல் ஆயதே - எரிந்து வெப்பம் வீசும் சூரியனுடைய கிரணங்களுக்கும் இதே புகுந்து இயங்கமுடிந்தது.
பொரிபரல்: பொரிந்த பரல்கற்கள் (வினைத்தொகை). படர் நிலம்: வினைத் தொகை. பொடிதல்: புழுதியாதல். கீழுறவிரிதல்: கீழ்வரை வெடித்தல். அரிமணி: உயர்ந்த மணியுமாம். பணம்: படம். அரா அரசு: பாம்புகளின் அரசன் (ஆதி சேடன்). எரிகதிர்: வினைத்தொகை. இயங்கல்: சஞ்சரித்தல். ஆயது: ஆகியது.
சூரிய வெப்பத்தால் பாலை நிலம் பிளந்து - சூரியனுடைய கதிர்கள் நுழைந்து சஞ்சரிக்கும்படி இருந்தது என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the land, spread with scorched gravel, crumbled and split
- down to the depths, and wide passages showed clearly,
- even into the realm of the serpent-king with gold-bright jewelled hoods
- the burning rays could easily enter and move about.
What the poem says
The desert floor, covered with sun-baked pebbles, has cracked so deep that the fissures reach all the way to the underworld of the Nāgas, ruled by the jewel-hooded serpent-king.
Normally sunlight never reaches that nether world; here the cracks are so wide that the sun's rays can stroll in at their ease.