கம்பராமாயணம் 3403 · ஆரணிய 8.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு - சங்குகள் பொருந்திய ஒப்பில்லாத கடல் போன்ற நீல நிறமுள்ள திருமேனியுடைய இராமனுக்கு; அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் - பொன் மானைத் தொடர்ந்து போன இடத்தில் நிகழ்ந்த தன்மையைச் சொன்னோம்; கொங்கு அடுத்த மலர்க்குழல் கொம்பனாட்கு - நறுமணம் பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற சீதைக்கு; இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் - இப்பன்னக சாலையில் நிகழ்ந்த தன்மையைச் சொல்லுவோம்.
இராமன் மேனிக்குக் கடல் உருவகம் 'கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்' என வரும் (650). மேலும் 'மையோ மரகதமோ மறிகடலோ' எனவும் காணலாம் (1926). கொங்கு - தேனும் ஆம். தகைமை என்பதற்கு இராவணனால் பற்றப்பட்டமை எனவும் கூறுவர்.
மலர்க்குழல் கொம்பு - இல்பொருள் உவமை. இது காப்பியத்தின் முன் நிகழ்ச்சியைக் கூறி இனிக் காப்பியத் தலைவிக்கு வரப் போவதை உணர்த்தும் கவிக் கூற்றாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What befell there to him whose body is like the matchless conch-filled sea
- we have told;
- what befell here to her, slender as a bough, with flowers in her honeyed hair,
- we shall now tell.
What the poem says
The poet opens a new section in his own voice. He has told what happened to Irāmaṉ, dark as the ocean full of conches, out where he chased the deer.
Now he turns to Cītai at the hut, slender as a flowering bough. Comparing Irāmaṉ's body to the sea is a familiar image in the poem. The verse looks back over what has happened and warns that misfortune is coming to the heroine.