கம்பராமாயணம் 3405 · ஆரணிய 8.3

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'' '
''

பொருள் · Meaning in Tamil

(சீதை) இவ் உழை பிடித்து நல்கு என - இந்த மானை நீயே பிடித்து எனக்குக் கொடு எனச் சொல்லி; பேதையேன் முதல் வாழ்வு முடித்தனென் என - அறிவற்ற நான் கணவனொடு வாழும் குலமகளின் தலைமையுற்ற வாழ்வை முடித்துக் கொண்டேன் என்று கூறி; மொய் அழல் கொடிப் படிந்தது என - நெருங்கிய தீ, ஒரு பூங்கொடியைப் பற்றி எரித்தது போலவும், நெடுங்கோள் அரா இடிக்கு உடைந்தது என - நீண்ட வலிய பாம்பு, இடி ஓசை கேட்டுத் தன் வலிமை கெட்டுக் கிடந்தது போலவும்; புரண்டு ஏங்கினாள் - தரையில் புரண்டு வருந்தினாள்.

பேதை - பேதைப் பருவப் பெண்ணையும் குறிக்கும். இங்குப் பேதைமைப் பண்பால் சீதை தன்னையே குறித்துக் கொண்டாள். முதல் வாழ்வு என்பதை வாழ்வு முதல் என மாற்றியும் பொருள் காண்பர். இடைதல் - வருந்துதல்.

மாரீசனின் போலிக் குரலைக் கேட்ட சீதை, இராமனின் உண்மைக் குரல் எனக் கருதித் தீப்பட்ட பூங்கொடி போலவும் இடியுண்ட நாகம் போலவும் துன்புற்றாள். உவமை இவ்வாறு அடுக்கி வந்து சீதையின் துன்பத்தைப் பெருக்கிக் காட்டும். உதயணன் மார்பில் மூர்ச்சித்து விழுந்ததை 'இடியேறுண்ட நாகம் போல' எனப் பெருங்கதை கூறும் (பெருங். 2. 10.112). சீவக சிந்தாமணியில் 'அருமை மாமணி நாக மழுங்கவோர் உருமுவீழ்ந்தென உட்கினர்' (242) என்ற உவமை காண்க. அது போல் இங்கும் மாரீசன் சொல் இடியாகப்பட்டது. சீதை புரண்டேங்குவது நாகம் இடிக்கு உடைதற்குப் பொருந்தும். மொய்குழற் கொடி - அன்மொழித்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'By saying, Catch and give me this deer, I, foolish one,
  2. have ended my first life,' and like a creeper
  3. seized by dense fire, like a long, strong serpent
  4. shattered by a thunderbolt, she rolled and wailed.

What the poem says

Cītai blames herself. By asking for the deer she has destroyed her life as a wife.

She rolls on the ground like a flowering creeper caught in fire, and like a great snake struck by thunder. Thunder was believed to strike snakes down. The commentary cites similar thunder-and-serpent images in the Peruṅkatai and the Cīvaka Cintāmaṇi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' 'piṭittu nalku, iv uḻai ' eṉap pētaiyēṉ
muṭittaṉeṉ mutal vāḻvu '' eṉa, moy aḻal
koṭip paṭintatu eṉa, neṭuṅ kōḷ arā
iṭikku uṭaintatu eṉap puraṇṭu ēṅkiṉāḷ.