கம்பராமாயணம் 3408 · ஆரணிய 8.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தையலீர்! - தாயே!; கடல் ஏழுமே - ஏழு கடல்களும்; உலகு ஏழும் ஏழுமே - பதினான்கு உலகங்களும்; சூழும் ஏழ் மலை - சூழ்ந்துள்ள ஏழு மலைகளும்; அவை தொடர்ந்த சூழல் வாய் - அவற்றைப் பின் தொடர்ந்த இடங்களில்; வாழும் ஏழையர் சிறுவலிக்கு - வாழ்கின்ற எளியோரின் அற்ப பலத்திற்கு; இராகவன் தனிமை வாள் அமர் தாழுமே - இராமனின் தனிப்பட்டு நின்ற நிலையிலுள்ள வீரம் கொடிய போரில் தாழ்வுபட்டு விடுமா? (விடாது).
அண்டங்களிலும் கடல்களிலும் மலைகளிலும் வேறு எங்கும் வாழும் உயிரினங்களின் துணையில்லாமலே வெல்லும் ஆற்றல் கொண்டவன் இராமன் என்பதை இது காட்டும். இராமன் திறனைப் பின்னர் வாலியும் 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ!' (4023) என்பதால் வெளிப்படுத்துவான்.
வாள் - கொடுமையைக் குறித்தது. முன்னரும் 'வாள் அரக்கன்' (கம்ப. 3322) என வந்துளது.
ஏழும் என வந்தது முற்றும்மை. ஏழுமே என வந்த ஏகாரம் எண்ணுப் பொருள்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The seven seas, the worlds seven and seven,
- the seven encircling mountains, and in the regions beyond them
- all the feeble creatures that live there, against their small strength in fierce sword-battle
- would Irākavaṉ alone be brought low? Lady!'
What the poem says
Ilakkuvaṉ goes on. Even if every creature in the fourteen worlds, the seven seas and the seven ringing mountains came against him, their strength would be nothing beside Irāmaṉ's.
He needs no help to win. Later Vālī too will praise him as a victor who needs no allies.