கம்பராமாயணம் 3407 · ஆரணிய 8.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எண்மை ஆர் உலகினில் - எளிமை பொருந்திய உலகத்தில்; இராமற்கு ஏற்றம் ஓர் திண்மை யார் உளர் எனச் செப்பற் பாலரோ - இராமனுக்கு மிக்க, சிறப்புடைய ஒரு வலிமையுடையவர் இருக்கிறார் எனக் கூறுவார்களா?; பெண்மையால் உரை செயப் பெறுதிரால் - நீர்டம் பெண்ணறிவால் இவ்வாறு கூறிவிட்டீர்; என உண்மையான் அனையவட்கு உணரக் கூறினான் - என்று உண்மை நிலையை உணர்ந்த இலக்குவன் அச் சீதைக்கு அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொன்னான்.
எண்மை - எளிமை. எண் பொருளவாகச் செலச் சொல்லி ' (குறள். 424) என்ற தொடரால் அறியலாம். எண்ணிக்கையும் ஆம். உண்மையான் என்பது பொன்மானைப் பொய்ம் மானென்ற உண்மையை உணர்ந்தவனுமாம், என்றும் இராமனுக்கு உண்மையோடிருப்பவன் எனவும் ஆம். அனையவட்கு - அனை அவட்கு எனக் கொண்டு தன் அன்னை போன்ற சீதைக்கு என்றும் உரைப்பர் இனி உலகத் தாய் எனவும் கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In this lowly world, that there is anyone of firmness
- greater than Irāmaṉ, would anyone say so?
- It is your womanliness that lets you speak so,'
- so he who knew the truth explained to her who was like a mother.
What the poem says
Ilakkuvaṉ answers Cītai calmly. Nobody in this world is stronger than Irāmaṉ, and only a woman's anxious fear could make her think otherwise.
He is the one who saw the truth about the deer, and he is always loyal to his brother. The phrase 'her who was like a mother' can also be read as plain 'her', and some take it as calling Cītai the mother of the world.