கம்பராமாயணம் 3414 · ஆரணிய 8.12

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'' ''

பொருள் · Meaning in Tamil

என்று அவன் இயம்பலும் - என்று இலக்குவன் கூறலும்; எடுத்த சீற்றத்தள் - பொங்கிய கோபத்தவளும்; கொன்றன இன்னலள் - தன்னைக் கொன்றது போன்ற துன்பத்தை அடைந்தவளும்; கொதிக்கும் உள்ளத்தள் - கொதிக்கின்ற மனமுடையவளும் ஆன; வன்தறு கண்ணினள் - வலிய அஞ்சாமை உடைய சீதை; நின்றநின் நிலை இது நெறியிற்று அன்று எனா - (இலக்குவனை நோக்கி, 'இராமனுக்குற்ற தீங்கைக் கேட்டும் அவற்கு உதவச் செல்லாது) இங்கு நின்ற உன்னுடைய இந்த நிலை நீதிமுறைப்பட்டது அன்று' என்று; வயிர்த்துக் கூறுவாள் - பகை பாராட்டிச் சொன்னாள்.

கொன்றன - கொன்றது போன்ற, கொன்றன்ன இன்னா செயினும் (குறள். 109) என்று வருதலை ஒப்பிடலாம். சீதை, தன்னை இலக்குவன் கொன்றது போல வந்த துன்பத்தினள் என உரைப்பர் இந்நிலையைச் சீதை வாயிலாகவே சுந்தர காண்டக் காட்சிப் படலத்தில் இளவலை எண்ணலா வினையேன் சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ?' (5082) என்பதால் உணரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said this, she, in rising fury,
  2. in pain that was killing her, with seething heart,
  3. saying, 'This stand you are taking is not right,'
  4. with fierce boldness, spoke in enmity.

What the poem says

Ilakkuvaṉ's words do not calm Cītai; they make her angrier. Burning with rage and in agony, she tells him boldly that it is wrong for him to stand here while Irāmaṉ is in danger.

She speaks to him as if he were an enemy. Later, in the Sundara Kāṇḍam, she will regret the cruel words she now says to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu avaṉ iyampalum, eṭutta cīṟṟattaḷ,
koṉṟaṉa iṉṉalaḷ, kotikkum uḷḷattaḷ,
'' niṉṟa niṉ nilai itu, neṟiyiṟṟu aṉṟu '' eṉā,
vaṉ taṟukaṇṇiṉaḷ, vayirttuk kūṟuvāḷ.