கம்பராமாயணம் 3415 · ஆரணிய 8.13

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர் - ஒரு நாள் மட்டும் பழகினவராயினும் அன்புடையோர் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவி புரிவர்; நீ பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் வெருவலை நின்றனை - (மாறாக) நீயோ இராமன் அழிவடைந்தான் எனும் தன்மையைக் காதால் கேட்டும் அஞ்சாமல் நின்றாய்; வேறுஎன் - இனி எனக்கு வேறு வழி யாது?; இனியான் எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா - இனிமேல் நான் தீயில் விரைந்து விழுந்து சாவேன் இவ்விடத்தே என்று கூறி; ஆல் - அசை. ஒரு நாள் பழகினும் உயிரை ஈயும் என்பதற்குக் குகன் இராமனுடன் வனம் செல்லத் துணிந்தமை சான்றாகும் (1993). பெருமகன் - ஆண்களில் சிறந்தோன். பகல் - தப்ப 'ஓல்லைகொடாஅ தொழித்த பகலும் (நாலடி. 1069) என வருதல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those who have known someone a single day will give their life for him;
  2. yet you, hearing that the great one is in peril,
  3. stand there unafraid; what else is left? Now I
  4. will throw myself quickly into the fire and die, here,' she said.

What the poem says

Cītai goes on reproaching Ilakkuvaṉ. Loving friends will give their lives for someone they have known for only a day, as Kukaṉ was ready to go into exile with Irāmaṉ after a single meeting.

Yet Ilakkuvaṉ, his own brother, hears that Irāmaṉ is in danger and does nothing. In despair she says she will throw herself into a fire and die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' oru pakal paḻakiṉār uyirai īvarāl;
perumakaṉ ulaivuṟu peṟṟi kēṭṭum, nī
veruvalai niṉṟaṉai; vēṟu eṉ? yāṉ iṉi,
eriyiṭaik kaṭitu vīḻntu iṟappeṉ, īṇṭu '' eṉā.