கம்பராமாயணம் 3416 · ஆரணிய 8.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாமரை வனத் திடைத் தாவும் அன்னம் போல் - செந்தாமரைக் காட்டில் தாவிச் செல்லும் அன்னப் பறவை போல; தூம வெங்காட்டு எரி தொடர்கின்றாள் தனை - புகை கூடிய கொடிய காட்டில் எரியும் தீயில் பாயும் சீதையை; சேமவிற் குமரனும் விலக்கி - பாதுகாவலுக்குரிய வில்லேந்திய இலக்குவனும் தடுத்து; சீறடிப் பூ முகம் நெடுநிலம் புல்லிச் சொல்லுவான் - (சீதையின் சிற்றடிகளாம் தாமரை மலர்களுக்கு எதிரே நெடிய தரையைத் தழுவி வீழ்ந்து பின்வருமாறு கூறுவான்.
காட்டுத் தீக்குத் தாமரையும் சீதைக்கு அன்னமும் உவமை. காடெல்லாம் தீப்பற்றிய தோற்றம் தாமரைக் காடாகத் தெரிகிறது. இதுபோன்றே யுத்த காண்ட மீட்சிப் படலத்திலும் 'நீத்த அரும் புனலிடை நிவந்த தாமரை ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்பாய்ந்தனள்' (10036) என வருதலையும் ஒப்பிட்டுணரலாம். சேம வில் என்பது இராமன் சீதை ஆகியோர் நலத்தைப் பாதுகாக்கும் பணியை மேற் கொண்ட வில் எனவும் ஆம். பெண்களின் அடி சிறிதாயிருப்பது அழகுக்கடையாளம். சீதையின் திருவடிகளைத் தொடாமல் அவற்றின் முன்னுள்ள நிலத்தில் இலக்குவன் வீழ்ந்து வணங்கியது அவனுடைய தூய்மையை உணர்த்தும். குமரன் என்பது இளையவன் என்றும், சீதையிடம் கொண்ட, மகன் அன்பையும் குறிக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a swan darting into a grove of lotuses,
- she rushed towards a fierce, smoking forest fire; she
- the prince of the guarding bow held back, and before her little feet,
- those flower-faces, he lay prostrate on the long ground and said:
What the poem says
Cītai runs towards a blazing forest fire like a swan darting into a bed of red lotuses. The flames look like lotuses, and she is the swan. A similar image appears later, when she enters the fire in the Yuddha Kāṇḍam.
Ilakkuvaṉ, whose bow is meant to protect, stops her. He throws himself on the ground in front of her small, flower-like feet without touching them, a sign of his purity and his reverence for her, and speaks.