கம்பராமாயணம் 3425 · ஆரணிய 8.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாமரைக் கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் - தாமரை மணிகளாலான அழகிய தவத்திற்குரிய மாலை அணிந்தவனாய்; ஆமையின் இருக்கையன் - ஆமை போல் ஐந்து பொறிகளை அடக்கியவன் போன்ற தோற்றமுடையவனாய், வளைந்த ஆக்கையன் - கூனிய உடம்பையுடையவனாய், நாமநூல் மார்பினன் - பெருமை பொருந்திய பூணூலை அணிந்த மார்பை உடையவனாய் இராவணன்; தூமனத்து அருந்ததி இருந்த சூழல் வாய் நணுகினான் - மாசற்ற மனமுள்ள அருந்ததி போன்ற சீதை இருந்த பன்ன சாலை இடத்தை வந்தடைந்தான். அரோ - அசை.
ஆமையின் இருக்கை - ஆமை மனை எனக் கூறி அதன் ஓட்டால் அமைந்தது என்பர். நாமம் - பெருமை, 'நாமநீர் அயோத்தி' (1307) எனப் பால காண்டத்தில் இப் பொருளில் வரும். சீதையின் தூய கற்புக்கு அருந்ததியே உவமையாகப் பயன்பட்டுள்ளமை காப்பிய மரபாகும். 'தீதிலா வட மீனின் திறம் இவள் திறமென்றும்' கண்ணகியின் கற்பின் சிறப்பை இளங்கோவடிகள் கூறுவார் (சிலப்பதிகாரம் 1.27). 'அருந்ததி அகற்றிய ஆசில் கற்பினாய்' எனச் சிந்தாமணியின் 327 ஆம் பாடலிலும் காணலாம்.
அருந்ததி வசிட்ட முனிவரின் மனைவி. தன் கற்பின் சிறப்பால் வட திசையில் விண்மீனாய் விளங்குகிறாள் என்பது புராண மரபு.
கண்ணொடு - ஒடு உருபு கருவிப் பொருளில் வந்தது. அருந்ததி - உவமை ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a fine ascetic's rosary of lotus seeds,
- seated like a tortoise, his body bent,
- the sacred thread on his chest, he drew near, ah,
- to the place where she who was Aruntati in purity of heart dwelt.
What the poem says
Irāvaṇaṉ, wearing a rosary of lotus seeds and the sacred thread, his body stooped, approaches the hut. His posture is like a tortoise drawing in its limbs, the image of someone who has drawn in his five senses.
Cītai is compared to Aruntati, wife of the sage Vasiṣṭha, who for her chastity shines as a star in the northern sky. Poets traditionally use her as the model of wifely faithfulness, as the Cilappatikāram does for Kaṇṇaki.