கம்பராமாயணம் 3424 · ஆரணிய 8.22

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூப் பொதி அவிழ்ந்தன நடையன் - பூவின் இதழ்கள் மென்மையாக விரிந்தாற் போலும் நடையுடையவனாகவும், பூதலம் தீப் பொதிந்தாமென மிதிக்கும் செய்கையன் - நிலம் நெருப்பால் நிறைந்துள்ளது போலும் காலால் பட்டும்படாமலும் அடிவைத்து நடப்பவனாகவும், காப்பு அரு நடுக்குறும் காலன் கையினன் - காக்க இயலாமல் நடுக்கங் கொண்ட கால்களையும் கைகளையும் உடையவனாகவும்; மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான் - முதுமைப் பருவமும் பிறர் கண்டு வெறுக்கும் வகையில் முதியவனாகவும் ஆனான் (இராவணன்).

பொதி - இதழ், அரும்பு மலர்கின்ற பொதியவிழ் வான் பூ (குறுந். 330) பொதியவிழ் பூ மரம் (பெருங். 1.51.5) எனப் பிற நூல்களிலும் 'பொதியினை நகுவன புணர்முலை' (75) என இந் நூலிலும் வருவது காண்க. அரும்பு மலரும் போது மிக மெதுவாக அவிழ்தல் போல மெதுவாக அடி எடுத்து வைப்பதைப் பிறரறியாமல் நடப்பவன். குறுநடையும் குந்தி நடத்தலும் அந்தணர்க்கியல்பு என்பர். முதுமையைக் கண்டு பிறர் வெறுப்பதை 'ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்' (பெரிய திருமொழி 1.1.3) என்பதும் ஒப்பிடற்குரியது. முற்றிய மூப்பு தன்னையே வெறுக்க எனவும் அமையும். தீப் பொதிந்ததாமென என்பது தீப்பொதிந்தாமென நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His gait was like a flower bud slowly opening; he trod
  2. as if the ground were packed with fire;
  3. his legs and hands shook beyond control;
  4. he was so far gone in old age that age itself might loathe it.

What the poem says

The disguised Irāvaṇaṉ walks as slowly as a bud unfolding, putting his feet down lightly as if the ground were hot coals. Short, careful steps were thought proper to Brahmins.

His hands and legs tremble, and he looks so very old that even old age might recoil from him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūp poti aviḻntaṉa naṭaiyaṉ; pūtalam
tīp potintāmeṉa mitikkum ceykaiyaṉ;
kāppu aru naṭukkuṟum kālaṉ; kaiyiṉaṉ;
mūppu eṉum paruvamum muṉiya muṟṟiṉāṉ.