கம்பராமாயணம் 3423 · ஆரணிய 8.21

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் - உணவு இல்லாதவன் எனக் கூறும்படி வற்றிக் காய்ந்த உடலை உடையவனாயும்; சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய் கையன் - நெடுந்தூரம் நடந்து வந்தது போன்று பெருந்துன்பத்தை வெளிப்படுத்தும் செயலை உடையவனாயும்; பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என - தாளத்தால் வரையறுத்து இசைப் பாடலைப் பாடுபவன் போல, வீணையின் இசைபட வேதம் பாடுவான் - வீணை இசை போலச் சாம வேதப் பாடல் பாடுபவனாயும் ஆனான்.

ஊண் - உணவு. பாணி - கை; இங்குக் கையில் உள்ள தாளத்திற்கு ஆகுபெயராய் வந்தது. பாட்டு என்பாருமுளர். வேதம் எனக் குறிப்பிடினும் நான்கு வேதங்களில் பாடலிற் சிறந்தது சாமவேதம் ஆதலின் அதுவே கொள்ளப்பட்டது. வீணையின் இசைபட என்பதற்கு வீணை இசை ஒப்பாகாமல் கீழ்ப்படும் வகையில் எனவும் கொள்ளலாம். இராவணன் வேதத்தில் வல்லவன் என்பதை முன்னர் வந்த 'சொல் ஆய் மறை வல்லோய்' (3246) என்ற தொடரால் அறியலாம். பின்னரும் மந்திரத் தருமறை வைகு நாவினான்' (8359) என வரும் தொடரிலும் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His body withered as if he had gone without food,
  2. his manner that of one worn out from coming a long way,
  3. as one who sings a melody measured by the beat of the hand,
  4. he chanted the Veda so that it sounded like the vīṇā.

What the poem says

Irāvaṇaṉ's disguise is complete. He looks gaunt and starved, worn out from a long journey, and he chants the Vedas, here taken to mean the musical Sāma Veda, keeping time with his hand.

His chanting is sweeter than a vīṇā. Irāvaṇaṉ really is learned in the Vedas, as the poem says elsewhere.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṇ ilaṉām eṉa ularnta mēṉiyaṉ,
cēṇ neṟi vantatu ōr varuttac ceykaiyaṉ,
pāṇiyiṉ aḷantu icai paṭikkiṉṟāṉ eṉa,
vīṇaiyiṉ icaipaṭa vētam pāṭuvāṉ.