கம்பராமாயணம் 3433 · ஆரணிய 8.31

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' தேவரும் , அவுணரும் , தேவி மாரொடும்
கூவல் செய் தொழிலினர் , குடிமை செய்திட ,
மூவுலகமும் இவர் முறையின் ஆள , யான்
ஏவல் செய்து உய்குவன் , இனி '' என்று உன்னினான் .

பொருள் · Meaning in Tamil

தேவரும் அவுணரும் தேவிமாரொடும் - விண்ணவரும் அசுரர்களும் தத்தம் மனைவியர்களுடன்; கூவல் செய் தொழிலினர் - நான் கூப்பிட்டவுடன் இட்ட கட்டளைகளைச் செய்யும் தொழில் உடையவர்களாய், குடிமை செய்திட - வழிவழியாக அடிமை வேலை செய்துவர; மூஉலகமும் இவர் முறையின் ஆள - மூன்று உலகங்களையும் இப்பெண் உரிமை பெற்று ஆண்டு வர; இனியான் ஏவல் செய்து உய்குவென் என்று உன்னினான் - நான் இவர் இட்ட பணிகளைச் செய்து ஈடேறுவேன் என்று இராவணன் கருதினான்.

கூவல் - கூவி அழைத்துக் குற்றேவல் செய்யப் பணித்தல்; குற்றேவலுமாம். குடிமை - வழிவழியாக அடிமை. இராவணன் முன்னர்ப் பெற்ற வாழ்வு தேவரும் அசுரரும் வழிவழியாக அடிமையாக அவன் இட்ட பணியைச் செய்து உய்யும்படி அமைந்த மேனிலைச் சிறப்புடையது. இப்போது அத்தகைய வாழ்வின் உரிமையைச் சீதைக்கு நல்கி அவளிட்ட ஏவற் பணியைத் தான் செய்து உய்ய வேண்டும் என

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With the gods and the asuras, together with their queens,
  2. as servants who come when called, serving her as bondsmen,
  3. and she ruling the three worlds by right, I
  4. will do her bidding and so be saved,' he thought.

What the poem says

Irāvaṇaṉ has made the gods and demons and their wives his hereditary slaves, who come running whenever he calls. Now he dreams of handing all this to Cītai.

She would rule the three worlds, and he himself would serve her and find his salvation in obeying her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' tēvarum, avuṇarum, tēvimāroṭum
kūvalcey toḻiliṉar, kuṭimai ceytiṭa,
mūulakamum ivar muṟaiyiṉ āḷa, yāṉ
ēval ceytu uykuveṉ, iṉi '' eṉṟu uṉṉiṉāṉ.