கம்பராமாயணம் 3434 · ஆரணிய 8.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் - வேதனை மிக்க துன்பப்படும் போதுகூட இவள் பொலிவு இத்தகைய சிறப்புடையது என்றால்; முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும் - நாணற் குருத்துப் போன்று ஒளி வீசும் புன்னகை செய்யும் போது அழகு எப்படிப் பட்டதாகும்?; தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் இளையவட்கு - கட்டவிழ்ந்த கூந்தலை உடைய இப் பெண்ணைப் பார்த்து எனக்களித்த என் தங்கை சூர்ப்பணகைக்கு; என் அரசு அளிப்பென் என்று எண்ணினான் - என்னுடைய அரசுரிமையைப் பரிசாகக் கொடுப்பேன் என்று இராவணன் கருதினான்.
உளைவுறு துயர் - இராமனைப் பிரிந்து பின் அவற்கு ஏற்பட்ட கேட்டை எண்ணி வேதனைப்படும் சீதையின் துன்பம் முன்னர்த் தூங்கல் இல் குயில் கெழு சொல்லின் உம்பரும் ஓங்கிய அழகினாள்' என இராவணன் உன்னியதைக் கண்டோம் (3345). முளை எயிறு - நாணற் குருத்துப் போன்ற பற்கள். 'முளையிள வெண்பன் முதுக்குறை நங்கை' எனவும் (சிலம்பு 15. 202). 'முளைஎயிறரும்பி' எனவும் (மணிமேகலை 4.100) முளையெயிற்றிவளை (சீவக. 2042) எனவும் முன்னை நூல்கள் இதைக் குறித்தன.
'தளையவிழ் கூந்தல்' என்பதைச் சீதைக்கு ஆக்கும் போது அன்மொழித் தொகையாம். தந்த என்பது சூர்ப்பணகை சீதையைக் கண்ட போதே அவளைத் தனக்கென அளித்து விட்டதாக இராவணன் துணிகிறான். இது காலவழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If this is the radiance of her face in aching grief,
- what would her smile be, with her shoot-like teeth gleaming?
- To my younger sister, who saw this woman of loosened hair and gave her to me,
- I will give my kingdom,' he thought.
What the poem says
Even in her anguish over Irāmaṉ, Cītai's face glows. Irāvaṇaṉ wonders how lovely she must be when she smiles, showing teeth like young reed shoots.
He is so grateful to his sister Cūrppaṇakai, who saw Cītai and, as he puts it, gave her to him, that he decides to reward her with his kingdom. He speaks as if Cītai were already his.