கம்பராமாயணம் 3436 · ஆரணிய 8.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏத்தினள் - வரவேற்றவளாம் சீதை; எய்தலும் - இராவண சன்னியாசி அப்பன்ன சாலையை அடையவும், 'ஈண்டு இருத்திர்' என வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் - 'இங்கு அமர்வீராக' என்று கூறிப் பிரம்பு இருக்கையை முறைப்படி அளித்தாள்; மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும் - பெருமைக்குரிய முக்கோலை அருகே வைத்த வஞ்சகனாம் இராவணனும்; பூத்தொடர் சாலையின் இருந்த போழ்தினே - பூக்கள் படர்ந்து அழகுடன் விளங்கிய அப்பன்ன சாலையில் அமர்ந்த போதிலே,
வேத்திரம் - மூங்கில். விதிப்படி இருக்கை அளித்ததால் அதைத்தொடர்ந்து நீரளித்து வரவேற்றல் (அர்க்கியம்), காலலம்ப நீர் அளித்தல் (பாத்தியம்), வலக் குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை உட் கொள்ளல் (ஆசம நீயம்) ஆகிய செயல்களைச் செய்தனள் என்பது பெறப்படும். இவ்வாறு கொள்வதை 'உபலட்சணம்' என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She had welcomed him; when he came in, saying, 'Sit here,'
- she offered him a cane seat, as the rule prescribes;
- and when the deceiver, setting his great triple staff beside him,
- sat in that hut hung with flowers,
What the poem says
Cītai receives the disguised Irāvaṇaṉ with full ceremony. She offers him a cane seat as custom requires, which implies the other rites of welcome as well: water for his hands, water for his feet, and water for sipping.
He lays his staff aside and sits down in the flower-covered hut. The sentence carries on into the next verse.