கம்பராமாயணம் 3437 · ஆரணிய 8.35

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாதகக் கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணின் - பெரிய பாவத்திற்குரிய கொடிய செயலைச் செய்ய வந்த அரக்கனாம் இராவணனை அங்குக் கண்ட போது; மலைகளும் மரனும் நடுங்கின - அங்கிருந்த மலைகளும் மரங்களும் நடுக்கம் கொண்டன; பறவையும் நா அவிந்து அடங்கின - பறவைகளும் கூவாமல் அடங்கி விட்டன; விலங்கும் அஞ்சின - கொடிய காட்டு மிருகங்களும் பயப்பட்டன; பாம்பும் படம் குறைந்து ஒதுங்கின - கொடிய பாம்புகளும் படமெடுப்பதை விட்டு அஞ்சி அடங்கின. ஏ - ஈற்றசை.

பாதகக் கடுந்தொழில் - பிறர் மனை நயத்தலாகும். காணும் கண்ணின் - காணும்பொழுது எனப் பொருள் கொள்ளப்பட்டது. மலை, மரம், பறவை, விலங்கு, பாம்பு போன்றவை இராவணனைக் கண்டு அஞ்சின. அவன் செய்யப் போகும் செயல்களால் சீதைக்கும் இராவணனுக்கும் நடக்கப் போகும் தீங்குகளைக் குறிக்கும் அறிகுறி எனலுமாம். கொடிய பாம்பும் படமவிந்து அடங்கிய நிலை அதனினும் இராவணன் தீங்கு செய்ய வல்லவன் என்பதைக் குறிக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mountains and the trees trembled; their tongues stilled,
  2. the birds fell silent; the beasts took fright;
  3. the snakes drew in their hoods and shrank away,
  4. the moment they saw the demon bent on his foul, cruel deed.

What the poem says

As soon as Irāvaṇaṉ sits down, the whole of nature shrinks from him. The hills and trees tremble, the birds fall silent, the wild beasts are afraid, and even the snakes lower their hoods and hide.

They sense the great sin he has come to commit, the coveting of another man's wife. Their fear is also an omen of the harm that will follow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭuṅkiṉa malaikaḷum maraṉum; nā avintu
aṭaṅkiṉa paṟavaiyum; vilaṅkum añciṉa;
paṭam kuṟaintu otuṅkiṉa pāmpum; pātakak
kaṭun toḻil arakkaṉaik kāṇum kaṇṇiṉē.