கம்பராமாயணம் 3444 · ஆரணிய 8.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈசன் இருந்த பேர் இலங்கு மால் வரை - சிவபிரான் எழுந்தருளியுள்ள பெரிதாக விளங்கும் மிகப் பெரிய கயிலை மலையை; ஆண்டு ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் - அக்காலத்தில் ஆணிவேருடன் அடியோடு பறித்து எடுக்கின்ற வலிமையுடையவன்; ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் - திசைகளைத் தாங்கும் பெருமையில் அளவில்லாத யானைகளின்; பூசல் செய் மருப்பினைப் பொடி செய் தோளினான் - போர் புரியும் கொம்புகளைப் பொடி செய்யும் வலிய தோள்களை உடையவன்.
ஊசிவேர் என்பதை நம்மாழ்வாரின் 'நீர்நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின்' என்ற அடிகளால் (திருவாய் மொழி!.2.3) காண்க. இராவணன் கயிலை மலையெடுத்தமை இக்காப்பியத்தில் பல இடங்களில் வரும். 'மலையெடுத்த தனிமலையே' எனச் சூர்ப்பணகையின் ஓல மொழிகளில் (2832) அறியலாம். 'உருட்டும் ஊற்றத்தான்' என்ற பாடமுளது அது மிகைபட மொழிந்ததாம். திக்கு யானைகளின் கொம்பொடித்த செய்தியும் இந்நூலில் பல இடங்களில் கூறப்பெறும். 'திக்கின் மாவெலாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்து' என்ற சூர்ப்பணகை கூற்றில் (2770) அறியலாம் இதனால் இராவணன் பேராற்றல் விளங்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He has the strength to pluck up by its very taproot
- the great shining mountain where Īcaṉ dwells;
- his shoulders crushed to powder the warring tusks
- of the boundless great elephants that bear the directions.'
What the poem says
Irāvaṇaṉ goes on boasting. This hero once tore up Mount Kailāsa, where Śiva lives, roots and all.
His shoulders smashed the tusks of the mighty elephants that hold up the four quarters of the world. Both deeds are mentioned many times in the poem, and Cūrppaṇakai has already spoken of them.