கம்பராமாயணம் 3443 · ஆரணிய 8.41

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

(அடுத்த இராவணன்) இந்திரற்கு இந்திரன் - தேவர் தலைவனாம் இந்திரனுக்கே தலைவன்; எழுதல் ஆகலாச் சுந்தரன் - ஓவியத்தில் தீட்டற்கு அரிய அழகுடையவன்; நான்முகன் மரபில் தோன்றினான் - பிரமனின் குல வழியில் பிறந்தவன்; அந்தரத் தோடும் எவ் உலகும் ஆள்கின்றான் - வானில் உள்ள உலகத்தோடு எல்லா உலகங்களையும் ஆள்கின்றவன்; மந்திரத்து அருமறை வைகும் நாவினான் - மந்திரங்களைத் தம் இடமாகக் கொண்ட அரிய வேதங்கள் தங்கியுள்ள நாவை உடையவன்...

இந்திரன் - தலைவன். நரேந்திரன் என வருதல் காண்க. நான்முகன் மரபினன் என்பதை முன்னர்ச் சூர்ப்பணகையும் இராமனிடத்து 'பூவிலோன் புதல்வன் மைந்தன்' (2770) எனக் கூறினாள் 'அருமறை வைகும் நாவினன்' என்பதற்கேற்ப இராவணன் தவக் கோலத்துடன் வந்ததைக் கூறும் போது 'வீணையின் இசைபட வேதம் பாடுவான்' எனப்பட்டது (3339). சீதையின் கேள்விக்கு விடையாக இராவணன் பெருமை இது முதல் கூறப்பெறுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He is Indra even to Indra; a handsome one no painter
  2. could portray; born in the line of the four-faced god;
  3. he rules every world along with the heavens;
  4. on his tongue dwell the rare Vedas with their mantras.'

What the poem says

Instead of answering plainly, Irāvaṇaṉ starts praising himself as if he were speaking of someone else. This lord, he says, is master even of Indra, the king of the gods. He is too handsome for any painter to capture, descended from Brahmā, ruler of every world including the heavens, and learned in the Vedas.

This begins a series of verses in which he boasts of his greatness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' intiraṟku intiraṉ; eḻutal ākalāc
cuntaraṉ; nāṉmukaṉ marapil tōṉṟiṉāṉ;
antarattōṭum ev ulakum āḷkiṉṟāṉ;
mantirattu aru maṟai vaikum nāviṉāṉ. ''