கம்பராமாயணம் 3448 · ஆரணிய 8.46

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

பொன்னகரத்தினும் - பொன்மயமான தேவேந்திரனின் நகரமாகிய அமராவதியைவிடவும்; பொலன் கொள் நாகர்தம் தொல் நகரத்தினும் - பொலிவு மிக்க நாகர்களுடைய பழைய நகரமாகிய போகவதியை விடவும்; தொடர்ந்த மாநிலத்து எந்நகரத்தினும் இனிய - (அவ்வுலகங்களால் மேலும் கீழுமாகத்) தொடரப்பட்ட இப்பூவுலகிலுள்ள எந்த நகரத்தை விடவும், இனிமையுடையது; ஈண்டு - இவ்வுலகில்; அவன் நல் நகரத்தன நவை இலாதன - அவனுடைய நல்ல இலங்கை நகரத்தில் உள்ளவை எவ்விதக் குற்றமும் இல்லாதன. பொன்னகரம் - அமராவதி - நாகர் நகரம் - போகவதி. மேலுலகம் கீழுலகம் நடுவிலுள்ள இவ்வுலகம் ஆகிய எவ்வுலகிலும் இல்லாத பெருமையும் பொலிவும் உடையது இலங்கையாம் இராவணனின் தலைநகரம். அதிலுள்ள பொருள்கள் மூவுலகிலுள்ள பொருள்களைக் காட்டிலும் இனியவை; குற்றமற்றவை. இவ்வாறு இராவணனின் பெருமை நகர் வாயிலாக விளக்கப் பெறும். 'உலகம் மூன்றில் தெட்புறு பொருள்கள் எல்லாம் இதனுழைச் செறிந்த' என்பார் பின்னரும் (4834). இனிய என்பதை அடையாகக் கொண்டு அழகிய எனவும் உரைப்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Sweeter than the golden city, than the ancient city
  2. of the radiant Nākas, than any city
  3. in the wide world that lies between them, here,
  4. the things in his fine city are without flaw.'

What the poem says

Irāvaṇaṉ praises his capital. Ilaṅkai is lovelier than Amarāvatī, the golden city of Indra in heaven, than Pōkavatī, the ancient city of the serpent people below, and than any city on the earth between them.

Everything in it is flawless. His greatness is shown through the splendour of his city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' poṉṉakarattiṉum; polaṉkoḷ nākartam
tol nakarattiṉum, toṭarnta mā nilattu
en nakarattiṉum iṉiya, īṇṭu avaṉ
nal nakarattaṉa navai ilātaṉa. ''