கம்பராமாயணம் 3449 · ஆரணிய 8.47

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

தாளுடை மலருளான் தந்த - நாளமுடைய தாமரை மலரில் வாழும் பிரமதேவன் கொடுத்த; அந்தம் இல் நாளுடை வாழ்க்கையன் - முடிவிலா ஆயுள் நாளுடன் கூடிய வாழ்வை உடையவன்; நாரி பாகத்தன் வாளுடைத் தடக்கையன் - உமையொரு பாகனாம் சிவன் அளித்த வாட்படையை ஏந்திய பெரிய கையையுடையவன்; வாரி வைத்த வெங் கோளுடைச் சிறையினன் - ஒருங்கு பிடித்து வைத்த கொடிய கிரகங்களைக் கொண்ட சிறைச் சாலையுடையவன்; குணங்கள் மேன்மையான் - எல்லாக் குணங்களாலும் மேன்மையுடையவன்.

பிற மலர்களைவிடத் தாமரையின் தண்டு உயர்ந்துள்ளமையால் 'தாளுடை மலர் எனப்பட்டது. முன்னரும் 'தாள தாமரை மலர் (527) எனப் புனையப்பட்டுள்ளது காண்க. இளமையில், அரிய தவம் செய்த இராவணன் அழியா வரத்தைப் பிரமனிடமிருந்து பெற்றான். அவன் கயிலை மலையைப் பெயர்த்தபோது சாமகீதம் பாடி இறைவனை மகிழ்வித்துச் சந்திரகாசம் என்ற வாளைப் பெற்றான் திக்கு விசயம் செய்த போது கதிர், மதியம் ஆகிய பல கோள்களைச் சிறை வைத்தான். வெம்மையைச்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He has a life of endless days granted by him who dwells
  2. in the long-stemmed flower; in his great hand is the sword
  3. of the god who is half woman; his prison holds the fierce planets
  4. he has swept up; he is supreme in every virtue.'

What the poem says

Irāvaṇaṉ lists more of his glories. Brahmā, seated on the long-stemmed lotus, granted him a life almost without end. Śiva, who shares his body with Umā, gave him the sword Candrahāsa, when Irāvaṇaṉ sang Sāma hymns to please him after trying to lift Kailāsa.

In his conquest of the world he imprisoned even the planets, the sun and moon among them. He ends by claiming to be supreme in every virtue.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' tāḷuṭai malaruḷāṉ tanta, antam il
nāḷuṭai vāḻkkaiyaṉ; nāri pākattaṉ
vāḷuṭait taṭak kaiyaṉ; vāri vaitta veṅ
kōḷuṭaic ciṟaiyiṉaṉ; kuṇaṅkaḷ mēṉmaiyāṉ. ''