கம்பராமாயணம் 3450 · ஆரணிய 8.48

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
' '
''

பொருள் · Meaning in Tamil

வெம்மை தீர் ஒழுக்கினன் - கொடுமை தீர்ந்த நல்லொழுக்கம் உடையவன்; விரிந்த கேள்வியன் - பரந்த வேதங்களை உணர்ந்தவன்; செம்மையோன் - நடுநிலை உடையவன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன் - காமனே கண்டு ஏங்கும் அழகுடையவன்; எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் - எவ்வுலகில் உள்ள எல்லோரும் தெய்வம் எனக் கருதும்; மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் - மூன்று முதல் தெய்வங்களின் பெருமைகளும் முழுதும் பெற்ற பெருமை உடையவன்.

கேள்வி - வேதம்; எழுதப்படாது ஓதியே உணரப்பெறும் நூல். சுருதி என்பதும் இப்பொருள் தருவதால் 'கற்றிலனாயினும் கேட்க' என்பதற்கேற்ப சான்றோரிடம் நூல்களைக் கேட்டுணர்ந்தவன் எனலுமாம். அழகின் கடவுள் மன்மதன் அவனே இராவணன் அழகைக் கண்டு திகைப்பான் எனில்; இராவணன் அழகு எல்லையற்றது என்பது குறிப்பு. மும்மையோர் திரிமூர்த்திகள் பிரமன், திருமால், சிவன். செம்மை - நற்பண்புமாம். செவ்வி - காளைப் பருவமுமாம்.

எம்மையோர் 'மை' விகுதி இடப்பொருளது. மும்மையோர் - மூவர் இதில் 'மை' பகுதிப் பொருள் விகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'His conduct is free of cruelty; his learning is vast;
  2. he is upright; his beauty dazes even Maṉmataṉ;
  3. he possesses wholly the greatness of the Three
  4. whom all of every world think of as gods.'

What the poem says

Irāvaṇaṉ goes on, with heavy irony, describing himself as free of cruelty, deeply learned in the Vedas and just. He says he is so handsome that even Maṉmataṉ, the god of love, is dazzled.

He claims to have all the greatness of the three supreme gods, Brahmā, Viṣṇu and Śiva, whom everyone in every world worships.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' vemmai tīr oḻukkiṉaṉ; virinta kēḷviyaṉ;
cemmaiyōṉ; maṉmataṉ tikaikkum cevviyaṉ;
emmaiyōr aṉaivarum ' iṟaivar ' eṉṟu eṇum
mummaiyōr perumaiyum muṟṟum peṟṟiyāṉ. ''