கம்பராமாயணம் 3451 · ஆரணிய 8.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனைத்து உலகினும் - எல்லா உலகங்களிலுமுள்ள; அழகு அமைந்த நங்கையர் எனைப்பலர் - அழகுடைய பெண்களிற் சிறந்தோர் மிகப் பலர்; அவன் தனது அருளின் இச்சையோர் - அவனுடைய அருளைப் பெற விருப்பமுடையோர்; அவர் நினைத்து உருகவும் உதவ நேர்கிலன் - அப்பெண்கள் எண்ணி மனம் உருகவும் அவர்க்கின்பம் கொடுக்க உடன்படாதவனாய், மனக்கு இனியாள் ஒரு மாதர் நாடுவான் - தன் உள்ளத்திற்கினியவளாம் ஒரு மங்கையைத் தேடுகிறான்.
நங்கையர் - பெண்களிற் சிறந்தார். அவருள்ளும் வடிவழகிற் சிறந்தவர் என்பது தோன்ற அழகு அமைந்த நங்கையர் என்றார். எனைப் பலர் - எத்தனையோ பலர் மாதர் - என்பது காதல் எனும் பொருள் கொண்ட உரிச் சொல், ஆகுபெயராய் விருப்பத்திற்குரிய மகளிர் மேல் நின்றது. மனக்கு - மனத்துக்கு விகாரம். கைகேயி கூற்றிலும் 'மனக்கு நல்லன சொல் வினை' என முன்னரும் (1471) வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Of the lovely women in all the worlds,
- ever so many long for his favour;
- though they pine for him and melt, he does not yield to them;
- he seeks one woman dear to his heart.'
What the poem says
Irāvaṇaṉ now moves towards his real purpose. Countless beautiful women in every world long for his love and waste away for him, but he will not give himself to them.
He is looking for one woman who will truly delight his heart. The hint at Cītai is plain.