கம்பராமாயணம் 3454 · ஆரணிய 8.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் - காட்டிலே பெருந் தவ முனிவரிடத்துத் தங்காதொழிந்தீர்; புனல் திரு நாட்டிடைப் புனிதர் ஊர் புக நினைத்திலிர் - நீர் வளமிக்க அழகிய நாடுகளில் தூயவர் நகர்களில் செல்ல நினையாதொழிந்தீர்; அறநெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினிர் - அறவழியை எண்ணியும் பார்க்காத தீய அரக்கர் கூட்டத்திடையே தங்கினிர்; என்செய்தீர் என்றாள் - என்ன செயல் செய்தீர் எனச் சீதை (இராவண சன்னியாசியிடம் கேட்டாள். நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்வது போல் முனிவர் வாழும் காட்டில் அன்றோ முனிவராகிய நீர் தங்கியிருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடில் தூய மக்கள் வாழும் புனித நகர்க்குச் செல்லவாவது எண்ணியிருக்க வேண்டும். அச்செயல்களைச் செய்யாமல் பாவமே புரியும் அரக்கர் கூட்டத்தில் தங்கியதால் பெரும் அநீதி செய்தீர் எனச் சொல்லாமல் சொல்கிறாள் சீதை.
நிலத்தியல் பால் நீர் திரிந்தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு (குறள். 452) என்பதற்கிணங்க முனிவர் வேடத்திலிருப்பினும் அவர் கூடி வாழ்ந்த இனத்தவர்களின் அவர் மன அறிவும் திரிந்திருக்கும் எனச் சீதை சுட்டுகிறாள். இதனை 'இனத்திடை வைகினிர் என்ற தொடரால் அறியலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You did not stay with the great ascetics in the forest;
- you did not think of entering the towns of holy men in the lovely well-watered lands;
- among a race that never gives a thought to dharma
- you have lived; what have you done!' she said.
What the poem says
Cītai rebukes the visitor. A holy man should live with other sages in the forest, as a swan lives in a lotus pool, or at least among good people in the towns.
Instead he has lived among demons who care nothing for righteousness. Hinting at a Tirukkuṟaḷ verse, that water takes on the nature of the soil it flows through and a person's mind takes on the nature of the company they keep, she suggests that his own mind must have been tainted.