கம்பராமாயணம் 3455 · ஆரணிய 8.53

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான் ,'' மறுவில் தீர்ந்தார் ,
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் ; மெய்ம்மை நோக்கின் ,
திங்கள் வாள் முகத்தினாய் ! அத் தேவரில் தீயர் அல்லர் ;
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான் - சீதை அச் சொல் கூறி அறிவுறுத்தியது கேட்ட எல்லை கடந்து ஒழுகுவோனாம் இராவணன்; மறுவின் தீர்ந்தார் வெங்கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் - குற்ற மற்றவர் கொடியவர்களாம் வாள் வீசும் இராக்கதர் எனக் கூறியதும் அஞ்ச மாட்டோம்; மெய்ம்மை நோக்கின் - உண்மையாக ஆராயின்; திங்கள் வாள் முகத்தினாளே - சந்திரன் போல் ஒளி படைத்த முகமுடையவளே!; தேவரின் தீயர் அன்றே - (அவ்வரக்கர்கள்) தேவர்களைக் காட்டிலும் கொடியவர் அல்லரே; எங்கள் போலியர்க்கு நிருதரே நல்லார் போலும் என்றான் - எங்கள் போல்வார்க்கு அரக்கர்களே நல்லவர் என்று சொன்னான்.

வரம்பு இலான் - வலிமை வரம் போன்றவை பெற்றுப் பிறரைவிடச் சிறந்தவனாயினும் அறவொழுக்கம் என்ற எல்லையைக் கடந்தவன். வெங்கண் - கொடுமை; கொடிய கண்களை உடையவர்கள் என்றுமாம். வெருவுதல் - அஞ்சி நடுங்குதல். தேவரின் - தேவர் போல எனவும் ஆம். போலியர் என்ற சொல்லில் இராவணனின் போலி வேடமும் தொனிப் பொருளாய் விளங்குகிறது. துறவிகள் சமநிலை உடையவராதலால் தேவர்க்கும் அரக்கர்க்கும் வேறுபாடு கருதோம் எனக் கூறியதாகவும் கொள்வர். போலும் : ஒப்பில் போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing the lady say this, he who knew no bounds said, 'Those who are free of fault
  2. do not fear because they are cruel-eyed, sword-bearing demons; if one looks at the truth,
  3. you whose face shines like the moon, they are not worse than the gods;
  4. to people like us, it seems the demons are the good ones,' he said.

What the poem says

Irāvaṇaṉ, who keeps within no limits, defends the demons. Holy men without fault have no reason to fear them; in truth they are no worse than the gods, and to ascetics like himself the demons seem the better of the two.

The word he uses for 'people like us' also suggests 'impostors like us', a hint at his false disguise. Some read his words as an ascetic's claim to treat gods and demons alike.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṅkai aḵtu uraittal kēṭṭa varampu ilāṉ,'' maṟuviṉ tīrntār,
veṅ kaṇ vāḷ arakkar eṉṉa veruvalam; meymmai nōkkiṉ,
tiṅkaḷ vāḷ mukattiṉāḷē! tēvariṉ tīyar aṉṟē;
eṅkaḷ pōliyarkku nallār nirutarē pōlum '' eṉṟāṉ.