கம்பராமாயணம் 3456 · ஆரணிய 8.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்ன சொல்ல - (இராவணன் அத்தகைய சொற்களைக் கூற; சேயிழை - செவ்விய அணிகலன்கள் பூண்ட சீதை; தீயவர்ச் சேர்தல் செய்தார் தூயவர் அல்லர் - கொடியவரை நட்பாகச் சேர்ந்தவர்கள் தூயவர் ஆகார்; சொல்லின் - விளக்கமாகக் கூறுவதாயின்; தொல்நெறி தொடர்ந்தோர் என்றாள் - பழைய தீய வழியில் தொடர்புடையோர் எனக் கூறினாள்; மாயவல் அரக்கர் வேண்டு உருவரிக்க வல்லர் என்பது - மாயையுடைய வலிய இராக்கதர் தாம் விரும்பும் வடிவம் கொள்ள ஆற்றல் உடையவர்கள் என்ற உண்மையை; ஆயவள் அறிதல் தேற்றாள் - அத்தகையவள் அறியாள்; ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் - ஆகையால் வேறாக ஒன்றும் நினையாள்.
'தீயவர்ச் சேர்தல் செய்தார் தூயவர் அல்லர்' என்ற கருத்து 'மனந் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்' (குறள். 455) என்ற கருத்துடன் ஒப்புடையது. அதற்கேற்பச் சிற்றினம் சேர்ந்தவர் சிற்றினத்தாரே எனச் சீதை முடிவு செய்கிறாள். அரக்கன் மாயையால் துறவி வேடம் பூண்டு வந்தனன் என்பதைத் தெளியாள். காரணம் அரக்கர்க்குத் தாம் வேண்டிய வடிவெடுக்கும் ஆற்றல் உள்ளது என்பதை அறியா நிலையாகும். 'அயல் ஒன்று எண்ணாள்' என்பது சீதையின் தூய மன நிலையைக் காட்டும்.
சேயிழை - பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he said this, she of fine jewels said, 'Those who keep company with the wicked
- are not pure; to put it plainly, they follow the old evil way';
- that the cruel demons of illusion are able to take whatever form they wish,
- she did not know; and so she suspected nothing else.
What the poem says
Cītai replies that anyone who keeps company with the wicked cannot be pure and is following the old evil path. The thought echoes the Tirukkuṟaḷ: purity of mind and of deed depend on the purity of one's company.
But she does not know that demons can take on any shape they choose. Her mind is innocent, so she never suspects that the 'ascetic' is a demon himself.